பொதுவாக எளிதில் எங்கும் கிடைக்கக் கூடிய பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளி இலை ஜூஸ் நமது வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக் கூடிய ஒரு பானமாகும். பப்பாளிப் பழ ரசமானது அதிக அளவு பயன்களைக் கொண்டது. குறிப்பாக கொசுக்கள் மூலம் பரவும் டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மிக விரைவாகப் பரவும் டெங்குக் காய்ச்சல் காரணமாக நமது வீட்டிலேயே பப்பாளி இலையை பயன்படுத்தி வீட்டு வைத்தியம் செய்து கொள்ளலாம். டெங்குக் காய்ச்சல் வராமல் தடுக்கவும், வந்திருப்பின் சிகிச்சையளிக்க இரண்டு விதமான முறைகள் பயன்படுத்தப்ப்டுகிறது. அதில் நிலவேம்புக் குடிநீர் ஒரு வகை சிகிச்சை முறையாகும். நிலவேம்பு மூலிகையானது பிரதான மூலிகையாகவும், அதனுடன் ஒன்பது வித்தியாசமான மூலிகைகளையும் சேர்த்து நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இரண்டாவது வகையானது பப்பாளி இலைச் சாறு சிகிச்சையாகும். மேற்கூறிய பப்பாளி இலைச் சாறு டெங்குக் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 45 வயதான நோயாளி ஒருவருக்கு கொடுத்துப் பரிசோதிக்கப்பட்டது. 25 மி.லி. அளவு கொண்ட பப்பாளி இலைச் சாறு தினசரி இரண்டு வேளை என்று தொடர்ச்சியாக 5 நாட்கள் அளிக்கப்பட்டது. மேற்கூறிய சிகிச்சை மேற்கொண்ட பின்பு அவரது இரத்தப் பரிசோதனை மூலம் நமக்குத் தெரிய வந்தது, அவரது இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 3.7ல் இருந்து 7.7 ஆக உயர்ந்து டெங்குக் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்க உதவியது. சிகப்பணுக்களின் எண்ணிக்கை 55லிருந்து 168 ஆக அதிகரித்தது.
பப்பாளி இலைச் சாறு குணப்படுத்தும் மருத்துவப் பண்புகள்
1. இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
2. ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் பப்பாளி இலைச் சாறில் காணப்படுவதால் தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. வயது முதிர்வு தோற்றம் தள்ளி போடப்படுகிறது.
3. இதயத்தில் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
4. ஈரல் மற்றும் கணையத்தின் செயல்பாடுகள் சீராகிறது. புற்று நோய் எதிர்ப்புத் திறன் பப்பாளி இலைச் சாறில் இருப்பதன் காரணமாக புற்று நோய் வராமல் தடுக்கிறது.
5. அதிக அளவு பப்பாளி இலைச் சாறு தினசரி அருந்தும் பட்சத்தில் பொதுவாக ஒன்றும் நேராது எனினும் சர்க்கரை நோயாளிக்கு இரத்தச் சர்க்கரை அளவு சற்றே குறைந்து காணப்பட்டது. பப்பாளி இலைச் சாறு தயாரிக்கும் போது ஓரளவு முதிர்ச்சி அடைந்த புத்தம் புதிய இலைகளையே நாம் பயன்படுத்த வேண்டும்.
தினசரி பயன்படுத்தும் அளவு என்ன?
பப்பாளி இலைச் சாறு பெரியவர்களுக்கு தினசரி இருவேளை அருந்தலாம். ஒவ்வொரு வேளைக்கும் 10 மி.லி. சாறு போதுமானது. சிறுவர்கள் எனில் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேளைக்கு 5 மி.லி. அளவும், 5 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு வேளைக்கு 2.5 மி.லி. அளவாக தினசரி இருவேளை உட்கொள்ள வேண்டும். இலைச் சாறு மிகவும் கசப்பாக இருக்கும் என்பதால் தேன் கலந்து உட்கொள்வது நல்லது.
இலைக் கஷாயம் மூலம் டெங்குவை விரட்டலாம்.
இலைக் கஷாயம் செய்வது எப்படி?
மேற்கூறிய முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பப்பாளி இலைத் துண்டுகளை நீர் விட்டுக் காய்ச்சவும். நீரின் நிறம் மாறும் பொழுது இறக்கி வடிகட்டிக் கொண்டு வேளைக்கு 25 மி.லி. அளவு என்று தினசரி இருவேளை உட்கொண்டு வரவும். தொடர்ச்சியாக 5 நாட்கள் பயன்படுத்த வேண்டும். பப்பாளி இலைக் கஷாயம் அல்லது சாறு கசப்பாக இருக்கும் என்பதால் குழந்தைகள் அவ்வளவாக அருந்த அடம் பிடிப்பார்கள். சிறிதளவு தேன் கலந்து தரலாம். மருத்துவரின் ஆலோசனைப் படி இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது நல்லது. டெங்கு காய்ச்சலில் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது உடலில் போதுமான அளவு நீர்ச் சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.