பப்பாளி முற்றிய பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து, இலைகளை எடுத்துக் கசக்கினால் நுரைபோல் வரும். அதை அப்படியே அதே கொதி நீரில் போட்டுக் கரைத்து வடிகட்டி அந்த நீரில் தலை முடியை அலசுங்கள். வாரம் ஒருமுறை இம்மாதிரி செய்து வர கூந்தல் மென்மையாவதுடன் பட்டுப்போல் மின்னும்.
பப்பாளிக்காயை கூட்டு செய்து சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். பப்பாளி பழத் துண்டை தினமும் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கும்.
ரத்தசோகை நீங்கவும், இதயம் வலுப்பெறவும் பப்பாளியில் உள்ள சில என்சைம்கள் உதவுகிறது.
பப்பாளிச் சாற்றைக் குடித்து வருவதால், கை, கால் குடைச்சல், மூட்டு வலி குணமாகும். பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வர இளமைத் தோற்றம் பெறலாம். நரம்புகள் பலம் பெறும். பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகும்.