பப்பாளி தரும் பப்பெயின் குடிநீர்

Spread the love

பழுக்காத பப்பாளிக் காயின் மேல் கத்தையைக் கொண்டு கீறினால் பால் போன்ற நீர் வடியும். இதற்கு ளேடக்ஸ் என்று பெயர். இதை சேமித்து காய வைத்துப் போதிய வேதிப் பொருட்களைக் கலந்து பெப்பெயின் தயாரிக்கிறார்கள். பெப்பெயின் உலர்ந்த தூளாகவோ மணல் போன்றோ இருக்கும்.

பெப்பெயினை முதன் முதலில் கண்டு பிடித்தவர் பெக்கோல்ட் என்னும் அறிவியல் அறிஞர் ஆவார். பெப்பெயின் முதலில் இலையில் ஆரம்பமாகும். பின்பு தண்டிலும் வேரிலும் தோன்றும். இளங்காய்களில் மிகுதியாக பெப்பெயின் நிறைந்திருக்கும். நன்கு பழுத்த கனியில் பெப்பெயின் குறைவாகவே காணப்படும்.

பப்பாளியின் உதவியினால் சிலி நாட்டிற்கு பெப்பெயின் அதிகளவில் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பெப்பெயின் சிறப்பான குடிநீர் தரும் ஒரு பொருள். பப்பாளிப் பழத்துடன் சர்க்கரை, சிட்ரிக் அமிலம் போன்றவற்றைக் கலந்தும் மேல் நாடுகளில் குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள். பெப்பெயின் சிறந்த புரத ஊக்கி ஆகும்.

டூனா என்ற மீனிலிருந்து எண்ணெய் எடுக்க, அழகு சாதனப் பொருட்கள், பற்பசை, சூயிங்கம் தயாரிக்க என்று பல வகைகளில் பயன்படுகிறது. இதில் அடங்கியுள்ள புரத ஊக்கியானது, செரிமானமின்மையை தடுக்கிறது. மூச்சு விடும் உறுப்புகளில் ஏற்படும் இறந்த திசுக்களை கரைக்கவும் ஆற்றல் பெற்றுள்ளது.

பெப்பெயின் சேர்த்து தயாரிக்கப்படும் அமில எதிர்ப்பு மருந்துகள் செரியாமை, புழுக்களால் ஏற்படும் தொல்லைகள், தோல் நோய்கள், நாக்கு, தொண்டை பகுதிகளில் ஏற்படும் புண்கள், சிறுநீரகம் சார்ந்த நோய்கள் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக அமைகிறது.

செரிமான உறுப்புகளில் ஏற்படும் கட்டிகளையும் எண்டோ செர்விசைடீஸ் என்னும் மாற்றத்தால் பெண்ணிடம் ஏற்படும் ஒரு வித மலட்டுத் தன்மையையும் பெப்பெயின் நீக்குகிறது.

ராகவேந்திரன்


Spread the love