பன்னீர் சமையல்

Spread the love

பன்னீர் பொரியல்

தேவையான பொருட்கள்

பனீர்                           – 1 கப்

பச்சை பட்டாணி                – 1 கப்

வெங்காயம்                     – 1

பச்சை மிளகாய்                 – 1

மிளகுத்தூள்                     – 1/4 டீஸ்பூன்

சீரகத்தூள்                      – 1/4 டீஸ்பூன்

கடுகு                                – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு                – 1/4 டீஸ்பூன்

எண்ணெய்                     – தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை    – சிறிது

உப்பு                           – தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். பனீரை நன்கு தூளாக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன் பனீரைப் போட்டு உப்பு போட்டு நன்கு கிளறவும். கடைசியாக பட்டாணியை போட்டு நன்கு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பன்னீர் 65

தேவையான பொருட்கள்

பனீர்                      – 200 கிராம்

மைதா                    – 2 டேபிள் ஸ்பூன்

கார்ன் ஃப்ளார்             – 2 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு                – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி            – 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட்     – 1 டீஸ்பூன்

உப்பு                       – தேவையான அளவு

கரம் மசாலா              – 1/4 டீஸ்பூன்

எண்ணெய்                – பொரிக்க

செய்முறை

பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் வெந்நீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து அதில் பனீரைப் போட்டு பிசறி அரைமணி நேரம் ஊற விடவும். பின்னர் எண்ணெயில் பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

பன்னீர் கபாப்

தேவையான பொருட்கள்

பனீர்                     – 1 கப்

வாழைக்காய்              – 2

பொட்டுக்கடலை மாவு     – 1/4 கப்

பச்சை மிளகாய்           – 4

கிராம்புப் பொடி           – 1/4 டீஸ்பூன்

மிளகு பொடி              – 1 டீஸ்பூன்

கரம் மசாலாப் பொடி      – 1/4 டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லி      – 1/4 கப்

உப்பு                      – தேவையான அளவு

எண்ணெய்                – பொரிக்க

செய்முறை

வாழைக்காயை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த வாழைக்காய், பனீர், பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, உப்பு, கரம் மசாலாப் பொடி, மிளகு பொடி, கிராம்புப் பொடி சேர்த்துப் பிசைந்து நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் எண்ணெய்யை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சூடாக சாஸுடன் பரிமாறவும்.

பனீர் ஃபிங்கர்ஸ்

தேவையான பொருட்கள்

பனீர்                – 300 கிராம்

எலுமிச்சம் ஜுஸ்     – 2 டீஸ்பூன்

உப்பு                 – 1 டீஸ்பூன்

மிளகாய் பொடி       – 1 டீஸ்பூன்

மேல் மாவிற்கு

கடலை மாவு              – 1 கப்

கார்ன் ஃப்ளார்             – 1 டேபிள் ஸ்பூன்

ஓமம்                     – 1/2 டீஸ்பூன்

சமையல் சோடா          – 1 சிட்டிகை

கரம் மசாலா              – 1/2 டீஸ்பூன்

பூண்டு விழுது            – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது    – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி              – 1/4 கப்

கறுப்பு உப்பு               – 1/4 டீஸ்பூன்

உப்பு                       – தேவையான அளவு

எண்ணெய்                 – பொரிக்க

சாட் மசாலா              – 2 டீஸ்பூன் (தூவ)

செய்முறை

பனீரை நீளத் துண்டுகளாக அதாவது 6 cms X 2 cms அளவு நறுக்கி உப்பு, எலுமிச்சம் ஜுஸ், மிளகாய் பொடி சேர்த்து பிசறி வைக்கவும். கடலை மாவு, உப்பு, கார்ன் ஃப்ளார், சமையல் சோடா, கறுப்பு உப்பு, ஓமம், மிளகாய் விழுது, பூண்டு விழுது, கரம் மசாலா, கொத்தமல்லி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி ஊற வைத்து வைத்துள்ள பனீரை கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சாஸுடன் பரிமாறவும்.

பனீர் கோப்தா மோர்க்குழம்பு

தேவையான பொருட்கள்

கோப்தாவிற்கு

பனீர் தூள்                 – 1 கப்

கடலை மாவு              – 1/4 கப்

சமையல் சோடா          – 1 சிட்டிகை

ஓமம்                     – 1/4 டீஸ்பூன்

இஞ்சி விழுது             – 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா              – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய்           – 3

கொத்தமல்லி, புதினா      – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு                       – தேவையான அளவு

மோர்க்குழம்பிற்கு

தயிர்                      – 500 மி.லி.

கடலை மாவு              – 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்               – 2 சிட்டிகை

மஞ்சள் பொடி             – 1 டீஸ்பூன்

உப்பு                      – தேவையான அளவு

தாளிக்க

பூண்டு பல்           – 2

வெந்தயம்      – 1/2 டீஸ்பூன்

கடுகு                – 1/4 டீஸ்பூன்

சீரகம்          – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை  – சிறிது

எண்ணெய்      – 1 டேபிள் ஸ்பூன்

(பச்சை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.)

செய்முறை

தயிரை நன்கு கடைந்து அதனுடன் கடலை மாவு, பெருங்காயம், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதனை அடுப்பில் வைத்து கொதித்ததும் அடுப்பைக் குறைக்கவும். பனீர், கடலை மாவு, ஓமம், சமையல் சோடா, உப்பு, கரம் மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒனறாகச் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் மோர்க்குழம்பில் போட்டு வேக விடவும். முதல் 5 நிமிடம் அடுப்பைக் கூட்டியும் பின்னர் அடுப்பைக் குறைத்து 15 நிமிடம் வேக விடவும். குழம்பு திக்காக இருந்தால் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும், வெந்தயம் போட்டு பின் பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி இறக்கவும். இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பாலக் பன்னீர்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை           – 1 கட்டு

பனீர்           – 200 கிராம்

வெங்காயம்     – 2

இஞ்சி விழுது   – 1 டீஸ்பூன்

பூண்டு பல்           – 10

பச்சை மிளகாய் – 3

மிளகுத்தூள்     – 1 டீஸ்பூன்

கிராம்பு         – 2

சீரகம்          – 1/2 டீஸ்பூன்

பால்            – 1/2 கப்

கிரீம்           – 1/4 கப்

எண்ணெய்      – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு           – தேவையான அளவு

செய்முறை

பாலக்கீரையை சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் கீரையை பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கிராம்பு, சீரகம் போட்டு தாளித்து பின் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின் இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் பாலக் அரைத்த விழுது, மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறி விடவும். பனீரைப் போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும். கடைசியாக கிரீமை மேலே ஊற்றி அலங்கரித்து அடுப்பிலிருநது இறக்கி பரிமாறவும்.

பனீர் கோவா லட்டு

தேவையான பொருட்கள்

பனீர்                – 100 கிராம்

இனிப்பு கோவா      – 100 கிராம்

சீனி                 – 3 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி     – 1 டீஸ்பூன்

பாதாம்               – 10

முந்திரி              – 10

நெய்                – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

சீனியைப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். பாதாம், முந்திரியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய், பனீர், கோவா, சீனி, ஏலக்காய்ப்பொடி, பாதாம், முந்திரி சேர்த்து உருண்டைகளாக உருட்டவும். இந்த லட்டு சீக்கிரம் கெட்டு விடும். அதனால் வேண்டிய அளவு செய்து, ஒரிரு செலவழித்து விட வேண்டும்.

பனீர் குலோப் ஜாமூன்

தேவையான பொருட்கள்

பனீர்                – 200 கிராம்

சீனி                 – 400 கிராம்

மைதா               – 2 டேபிள் ஸ்பூன்

பால் பவுடர்          – 4 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர்       – 1 சிட்டிகை

எண்ணெய்            – பொரிக்க தேவையான அளவு

நெய்                 – 2 டீஸ்பூன்

தண்ணீர்              – 400 மி.லி.

செய்முறை

பனீர், மைதா, பால் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயுடன் நெய் சேர்த்து சூடாக்கி அடுப்பைக் குறைத்து பனீர் உருண்டைகளை பொரித்தெடுக்கவும். சீனியுடன் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து சுகர் சிரப் செய்து கொள்ளவும். சுகர் சிரப்பில் பொரித்து வைத்துள்ள பனீர் ஜாமூன்களை போட்டு ஊற விட்டு பரிமாறவும்.

ரசகுல்லா

தேவையான பொருட்கள்

பால்      – 1 லிட்டர்

மைதா    – 1 டீஸ்பூன்

தயிர்      – 1 கப் (புளிக்காதது)

சீனி       – 400 கிராம்

தண்ணீர்   – 1/2 லிட்டர்

செய்முறை

பாலைக் கொதிக்க வைத்து தயிர் சேர்த்து இறக்கி மூடி வைக்கவும். நன்கு திரிந்து தண்ணீர் பிரிந்த பின் துணியில் வடிகட்டி சுமார் 4 மணி நேரம் வைத்து கட்டியாக பனீரை எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மைதாமாவைப் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்மைகளாக செய்யவும். ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் உருண்டைகளை போட்டு 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும். பின் 10 நிமிடங்கள் மூடாமல் வேக வைக்கவும்.

உணவு நலம் ஜனவரி 2011

பனீர், சமையல், பனீர் பொரியல், செய்முறை, பனீர், பச்சை பட்டாணி, வெங்காயம், பச்சை மிளகாய், பனீர் 65, செய்முறை, பனீர், மைதா, கார்ன் ஃப்ளார், அரிசி மாவு,      மிளகாய் பொடி, பனீர் கபாப், செய்முறை, பனீர்,   வாழைக்காய், பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய்,    பனீர் ஃபிங்கர்ஸ், செய்முறை, பனீர், எலுமிச்சம் ஜுஸ், உப்பு, மிளகாய் பொடி, பனீர் கோப்தா மோர்க்குழம்பு, செய்முறை, தயிர், கடலை மாவு, பெருங்காயம், மஞ்சள் பொடி, உப்பு, பாலக் பனீர், செய்முறை, பாலக்கீரை, பால், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, பனீர், கோவா லட்டு, செய்முறை, பனீர்,   இனிப்பு கோவா, சீனி, ஏலக்காய்ப்பொடி,     பாதாம்   , பனீர் குலோப் ஜாமூன், செய்முறை, பனீர், மைதா, பால் பவுடர், பேக்கிங் பவுடர், ரசகுல்லா, செய்முறை, பால், மைதா,


Spread the love