சகல ஐஸ்வர்யம் தரும் பஞ்ச தீப எண்ணெய்

Spread the love

உலகம் முழுவதும் பாரம்பரியமாக, மதம் சார்ந்த விஷேஷங்களில் நாம் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி வருகிறோம். நமது வீட்டினினை அலங்கரிக்கவும், பிரார்த்தனை செய்யும் நேரங்களிலும் எண்ணெய் விளக்குகள் பயன்படுகிறது. எண்ணெய் விளக்குகளை ஒளிரச் செய்யும்பொழுது நமக்கு மனதில் ஒரு அமைதியையும், நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு ஒரு சக்தியையும் வழங்குகிறது.

நமது தாத்தா, பாட்டி காலத்தில் விளக்குகளை ஒளிரச் செய்யும் எண்ணெய்கள் பலவித மூலிகைகளின் விதைகளை இடித்து நசுக்க பிழிந்து தயாரிப்பது வழக்கம். அதில் பஞ்சதீப எண்ணெய் மிகவும் விஷேஷமான ஒன்று. பஞ்சதீப எண்ணெய் மிகவும் விஷேஷமான ஒன்று. பஞ்ச தீப எண்ணெய் என்பது ஐந்து விதமான எண்ணெய்களை சேர்த்து ஒன்றாக்கி பயன்படுத்துவது ஆகும். அவை சுத்தமான வெண்ணெய், நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகும். மேற்கூறிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஒளிரச் செய்தால் வீட்டில் சந்தோஷமும், செல்வமும், புகழும், மன அமைதியும் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

பஞ்சதீப எண்ணெயில் பயன்படுத்தும் ஒவ்வொரு வகை எண்ணெயும் தனிப் பண்புகளையும், பயன்களையும் கொண்டுள்ளது. அவை நமது பஞ்ச பூதங்களால் ஆன உடலை நினைவுபடுத்துவதுடன், நமது உடலில் உள்ள சக்தி மண்டலங்களை சமநிலைப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் பஞ்சதீப எண்ணெய் இயற்கையான பூச்சி மற்றும் கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது.

போபால் விஷ வாயு சம்பவம் நடைபெற்ற பொழுது விஷவாயுவின் சுவாசிப்பால் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்த நேரத்தில் நகரில் வசித்து வந்த ஒரு குடும்பம் தங்கள் வீட்டில் பஞ்சதீப எண்ணெயினால் பூஜை செய்ததால் உயிர் தப்பித்தார்கள் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

அவர்கள் பஞ்ச தீப எண்ணெயை நாமே எளிதாக தயாரித்துக்காள்ள இயலும். வெண்ணெய் அல்லது நெய், எள் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் பொதுவாக நமது வீட்டில் வாங்கி வைத்திருப்போம். வேப்ப எண்ணெயும், இலுப்பை எண்ணெயும் நாம் அங்காடிக் கடைகளில் பெற்றுக்காள்ளலாம். எண்ணெய் தயாரிக்கும்பொழுது சுத்தமான வெண்ணையை உருக்க நெய் வடிவில் தயாரித்துக் கொண்டு அனைத்து எண்ணெய்களையும் சம அளவில் சேர்த்து நன்றாக கலந்து கொண்டால் பஞச தீப எண்ணெய் விளக்கிற்கு பயன்படுத்த தயார் ஆகிவிடும்.


Spread the love