பனைமரம்

Spread the love

இந்தியா முழுவதும், குறிப்பாக தென் இந்தியாவில் பரவலாக காணப்படும் உபயோகமான மரம் பனைமரமாகும். தமிழ் நாட்டில், பனைமரத்தை ‘கற்பக விருஷம்’ என்பார்கள். ஏனென்றால் மரம் முழுவதும் பயன்படும். 800 வகைகளில் பனைமரம் உபயோகமாகிறது! நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

மரங்களிலிருந்து பால் போன்ற மரச்சாறு எடுக்கப்படும். மரம் நட்டபின் 15 வருடம் வளர்ந்தபின், “பால்” எடுப்பதை ஆரம்பிக்கலாம். இதை 30-40 வருடங்கள் வரை செய்யலாம். வருடத்தில் 4-5 மாதங்கள் “மரச்சாற்றை” (‘பால்’) எடுக்கலாம். ஒரு பனை மரம் 225-360 லிட்டர் மரச்சாற்றை (வருடத்தில்) கொடுக்கும். பனைமரம், பேரீச்சமரம் போல, ஒரு பாலைவன தாவரம்.

பனை மரச்சாற்றை (‘பாலை’) ஒரு பெரிய, அகலமான, அதிக ஆழமில்லா பாத்திரத்தில் காய்ச்சப்படும். 200 டிகிரி சென்டிகிரேட் வரை காய்ச்ச, பனஞ்சர்க்கரை, வெல்லம் இவை கிடைக்கும். பனை வெல்லத்தில் தாதுப்பொருட்கள் அதிகம். ஆயுர்வேதத்தில், தொண்டை மற்றும் நுரையீரல் பாதிப்புகளுக்கு கொடுக்கும் மருந்துகளில் வெல்லம் சேர்க்கப்படுகிறது.

பனைமரத்தின் விஞ்ஞான பெயர்கள்

1.       Borassus flabellifer          –       ஆசிய, இந்திய பனை மரங்கள்

2.       Borassus aethiopium        –       ஆப்பிரிக்க பனை

3.       Borassus akeassic             –       மேற்கு ஆப்ரிக்க பனை

4.       Borassus heineanus           –      நியூகினி பனை

5.       Borassus madagascariensis          –      மடகாஸ்கர் பனை

6.       Borassus sambiranensis     –      மடகாஸ்கர் பனை.

இந்திய மொழிகளில்:- சமஸ்கிருதம் – தாலா, ஹிந்தி – தார், ஆங்கிலம் – Palmyra Palm.

பனை பொருட்களின் மருத்துவ குணங்கள்:-

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. இரத்த சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு. தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

இதர பயன்கள்

பனை வெல்லம் சமையலில் இந்தியாவில் பரவலாக பயன்படுகிறது. ஒரு சிறு துண்டு வெல்லத்தை சாம்பார், ரசம் இவற்றில் போடுவது வழக்கம். குஜராத்தில் பருப்பு சூப்புகளில் வெல்லம் சேர்ப்பதுண்டு. வெல்லத்தால் கடலை மிட்டாய், எள்ளுருண்டை போன்றவை செய்யப்படுகின்றன.

உலகிலேயே பெரிய “வெல்லச்சந்தைகள்” இரண்டும் இந்தியாவில் தான் உள்ளன. முதன்மையானது, உத்திரப்பிரதேசத்தின் முஜாப்பூர் மாவட்டம் இரண்டாவது ஆந்திரபிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ‘அனகாட்பள்ளி’. அனகாட் பள்ளி வெல்லம் உலகபுகழ் பெற்றது. ஆயுர்வேதத்தில், வர்க்கம் என்று கரும்பு, அதன் சாறு, சர்க்கரை, வெல்லம், கல்கண்டு போன்றவற்றை குறிக்கிறது. சரகர் கரும்புச்சாற்றின் பண்டங்களைப்பற்றி குறிப்பிட்டிருப்பது கீழ் வருமாறு:-

கரும்புச் சாற்றின் பண்டங்கள்

பொருள்

1.       கரும்புச் சாறு

2.       வெல்லம்

3.       சர்க்கரை

4.       தேன்

குணம்

குளிர்ச்சி, எண்ணை போல் உராய்வை குறைக்கும் எண்ணை போன்றது.

செயல்பாடு

மலமிளக்கி, அமிலத்தை உண்டாக்கும்.

ரத்தம் மஜ்ஜை, தசை இவற்றை பெருக்கும். வயிற்றுப்பூச்சிகளை ஊக்குவிக்கும்.

தாகம் தணிக்கும், உடலுக்குள் ஏற்படும் ரத்தக்கசிவை குறைக்கும், நெஞ்செரிச்சல்

குறையும்.

வாந்தி, பேதியை நிறுத்தும் இருமலுக்கு மருந்து. சூட்டு உடலுக்கு நல்லதல்ல.


Spread the love