பாக்கெட் ஸ்நாக்ஸ் ஆபத்தா?

Spread the love

இப்போதெல்லாம் நொடியில் சமைக்க கூடிய டின்உணவுகள் கிடைக்கின்றன. ஏன், டின் உணவை வாங்கி அப்படியே சாப்பிடக்கூடிய முழு உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ்உணவுகள் கிடைக்கின்றன. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் இக்கால சூழ்நிலையில் ரெடிமேட்உணவுகள் ஒரு வரப்பிரசாதம் தான்.

உணவின் முக்கியத்துவத்தினால், அதை பல நாள் கெடாமல் வைக்கும் வழிகளை தொன்று தொற்றே மனிதன் தேடி வருகிறான். இந்த தொழில் நுட்பம் தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது. உணவை காக்கும் ரசாயன பொருட்களில்லாமல் பழச்சாறுகள் “டெட்ரா – பேக்” கில் கிடைக்கின்றன. இருந்தாலும், உணவை கெடாமல் பல நாள் பாதுகாக்கும். டெட்ரா பேக்‘, இராசாயன பொருட்கள் முதலியனவற்றை தொடர்ந்து உபயோகித்தால் உடலுக்கு ஊறு விளைவிக்குமா என்பது ஒரு கேள்விக்குறி. இந்த கேள்விக்கு பதிலை தேடு முன், உணவுகளை கெடாமல் பாதுகாக்கும் முறைகள் என்ன என்பதை பார்ப்போம்.

உணவை காக்கும் பொருட்கள்

உணவை காக்கும் பொருட்கள் இரு விதமாக செயல்படுகின்றன. உணவை கெடுக்கும் நுண்ணுயிர்களை அழிக்காமல், அதே சமயம் அவற்றின் செயல்பாடுகளை தாமதிக்கும் படி செய்வது ஒரு வகை. இன்னொரு வகை உணவுக்கு சம்மந்தமில்லாத ரசாயன பொருட்களில் நுண்ணுயிர்கள் வளர்வதை நிறுத்தி அவற்றை அழிப்பவை. உணவை கெட்டுப் போகாமல் காக்கும் இராசயன பொருட்களில் முக்கியமானவை சோடியம் பென்சோயட் மற்றும் இதர பென்சோயேட்டுகள். இவை உணவுப் பொருட்களில் சேர்க்க வேண்டிய அளவு – 0.1% என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த பென்சோயட்டுக்கள், பென்சோயேடிக் அமிலத்திலிருந்து தயரிக்கப்படுகின்றன. பென்சோயேட் அமிலம் பேக்டீரியா, பூஞ்சனங்களை விட யீஸ்டுகளை தடுக்கும். தானியங்கள், மாமிச உணவுகள், சர்க்கரை குறைந்த உணவுகள், சிற்றூண்டிகள், கேக் முதலியனவற்றை நெடுநாள் பாதுகாக்க பென்சோயடிக்குகள் தவிர்க்க வேண்டும். ஜீரண சாறுகளை தற்காலிகமாக இந்த ரசாயன பொருட்கள் பாதிக்கும். சர்ம நோய்கள் ஏற்படலாம்.

இதர ரசாயன பொருட்களான க்ளைகால்கள், சார்பிக் அமிலம், வெனிலிக் அமில எஸ்டர்கள் முதலியவும் உணவை கெடாமல் பாதுகாக்க சேர்க்கப்படுகின்றன.

மேற்சொன்ன இரசாயனப் பொருட்கள் ஆர்கானிக் (அதாவது தாவிரம், விலங்குகளிலிருந்து கிடைப்பவை) எனப்படும். இனார்கானிக் எனப்படும் முழு செயற்கை பொருட்கள் சல்ஃபர்- டை – ஆக்ஸைட், மற்றும் சல்ஃபைட்டுக்கள். பழங்களும், காய்கறிகளும் கெடாமலிருக்க ஸல்ஃபைட்டுகள் உதவுகின்றன. சல்ஃபர் (கந்தகம்) கூட்டுப் பொருட்கள் பொதுவாக ஒயின்தயாரிப்பில் பயனாகின்றன. ஆஸ்துமாவை சல்ஃபட்டுகள் தூண்டிவிடும். சல்ஃபர் – டை – ஆக்ஸைட் உணவின் பல பொருட்களை ரசாயன ரீதியில் பாதிக்கலாம். நுனாயில் பாதிப்புகள், ரத்த அழுத்தக் குறைவு முதலியன ஏற்படலாம்.

உணவை கெடாமல் காக்கும் இயற்கை பொருட்கள்

உப்பு, சர்க்கரை, தேன் இவை சேர்ந்த உணவுகள் நெடுநாள் கெடாமலிருக்கும் இவை தனியாக சேர்க்கப்படும் தேவையின்றி உணவின் ஒரு பாகமாக அமைகின்றன. ஆஸ்மோசிஸ்முறையில் நுண்ணுயிர் வளர்ச்சியை சர்க்கரை கட்டுப்படுத்தும். சர்க்கரை பாகில் வைக்கப்பட்ட உணவுகள் பல நாட்கள் கெடாது.

உப்பு பழங்காலத்திலிருந்தே உணவை பாதுகாக்க கப்பல்களில் உபயோகிக்கப்பட்ட பொருள். பாக்டீரியா வளர்ச்சியை உப்பு தவிர்கிறது. ஊறுகாய்கள், மாமிச உணவுகள், உப்பினால் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன. தேனும் இயற்கையாக உணவை கெடாமல் பாதுகாக்கும். தேனே பல நாட்கள் கெடாத பொருள். நெல்லிக்காயை நெடுநாள் பாதுகாக்க தேனில் வைத்தால் போதும்.

கதிர்வீச்சு முறை

உணவுகளை நெடுநாள் காக்க, அதிவேக கோபால்ட் 60 மற்றும் செசியம் 137 கதிர்வீச்சு முறைகளும் கையாளப்படுகின்றன. இந்த முறையில் நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டாலும், உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்துக்கள் அழியும் அபாயம் உள்ளது. வைட்டமின்கள் (குறிப்பாக ஏ, , H 1) கதிர்வீச்சை தாங்க முடியாமல் அழிந்து போகலாம். ஆனால் உலக சுகாதார குழுமம், கதிர்வீச்சு அபாயகரமானது அல்ல என்று அறிவித்துள்ளது. சில தேசங்கள், கதிர்வீச்சு முறையை, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாம்பழம், திராட்சை, முதலியவற்றின் ஆயுளை நீடிக்கவும், பருப்பு, வேர்க்கடலை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, கோதுமை இவற்றிலிருந்து பூச்சிகளை நீக்கவும், பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளன.

பாக்கிங்

உணவுப் பொருட்களை பாதுகாக்க பிரத்யேக பொருட்களை உபயோகிப்பது தற்போது வழக்கத்திலிருந்தது. பொருட்களை ஈரப்பசையிலிருந்து காப்பாற்ற ப்ளாஸ்டிக், அலுமினிய ஃபாயில், டெட்ராபேக் முதலியன உபயோகிக்கப்படுகின்றன.

சேமிப்பு கிடங்குகள்

குளிர்சாதன வசதியுள்ள நவீன கிடங்குகள் உணவுப்பொருட்கள், தானியங்களை நெடுநாள் காக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன.

இருந்தாலும் குழந்தைகளுக்கு டின் உணவுகள் தருவதை தடுக்கவும். இயற்கையாக பாதுகாக்கப்பட்ட உணவுகளை தவிர, மற்ற டின் உணவுகளை சேர்க்காமலிருப்பது நல்லது.

ஆயுர்வேதம். காம்


Spread the love