பழங்கள், காய்கள், முட்டை, நன்றாக வேக வைத்து சமைக்கப்பட்ட இறைச்சி, மற்றும் மீன் என்று அனைத்து வகைகளிலும் தேர்ந்தெடுத்த சரிவிகித சத்துணவு சாப்பிடுதல் அவசியம். இதன் காரணமாக கர்ப்பிணிகளுக்கு சரியான அளவு புரதம், உயிர்சத்துகள், சக்தி கிடைக்கும்.
நடைமுறை வாழ்கையில், ரெகுலராக நடைப்பயிற்சியை தவிர்க்கக்கூடாது.
நாள் (ஒன்றுக்கு 8 அல்லது 10 தம்ளர்) தவறாமல் அதிகம் தண்ணீர் அருந்தவும்.
எளிதான உடற்பயிற்சிகளை (உங்கள் குழந்தை பிரசவ நேரத்தில் எளிதாக வெளியே வர உதவும் இடுப்பெலும்பு பகுதியில்) செய்தால் உங்கள் உடல் லேசாக இருக்கும்.
மனதுக்கு இதமூட்டும் பாடல்கள், இசைகளை கேட்டு ரசியுங்கள். மனஅழுத்தம், பரபரப்பின்றி சாதாரணமாக, நேர் மறை எண்ணங்களுடன் இருங்கள்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது மருத்துவ பரிசோதனைகள் பல அடிக்கடி செய்வது தற்காலத்தில் அதிகரித்துவிட்டது. இம்மாதிரி பரிசோதனை காலத்தில், எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். வீண் பயம் வேண்டாம்.
நார்மலான பிரசவம் ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்புவதை, உங்கள் டாக்டர் ஆதரிக்கிறாரா அல்லது மருத்துவமனை ஆதரிக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்பிணிகளுக்கு என்றே நடத்தப்படும் வகுப்புக்குச் சென்று வாருங்கள்.
டாக்டர் சொன்ன பிரசவ தேதிக்கு தாண்டியும் பிரசவம் ஆகவில்லை என்றாலும் நீங்களும் உங்கள் குழந்தையும் நலமாக இருக்கீறீர்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். பிரசவ தேதி கழித்தும் கூட நார்மல் பிரசவத்திற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்கூறிய டிப்ஸ்களை கடைபிடித்து வந்தால் கர்பிணிகளில் 95%பேர்களுக்கு எளிதாக பிரசவம் ஏற்படும்.