அடி வயிற்றுவலி
பெருங்காயத்தை அரைத்து தண்ணீர் கலந்து உள்ளுக்குள் அருந்த தரலாம். சூடான தண்ணீரை ட்யுபில் நிரப்பி அல்லது சூடான தண்ணீரில் பருத்தி (மெல்லிய) துணியை நனைத்து அடிவயிற்றில் வெளிப்புற ஒத்தடம் தரலாம்.
பெருங்காய சூரணம் உள்ளுக்கும் கொடுத்துவர அடி வயிறு வீக்கத்திலிருந்து குணம் கிட்டும்.
பஞ்சசாகர் சூரணம் உள்ளுக்கு கொடுத்துவர மலச்சிக்கல் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். அடி வயிற்றிவலி குறிப்பாக உணர மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது, எப்பொழுதும் சத்தான உணவுகளையே சாப்பிடுங்கள்.
உணவு மிகக் குறைவாகவோ மிக அதிகமாகவோ இல்லாமல் பசி உணர்வுடன் அளவு தெரிந்து சாப்பிட்டால் அடி வயிறு வலி வருவதை தவிர்க்கவும்.
முதுகுவலி
நன்றாக ஓய்வு எடுங்கள், சூடான நீரில் முதுகு பகுதியில் ஆவி பிடியுங்கள். முன்பகுதி வளையும் வேலைகளை வலி உள்ள நேரத்தில் செய்ய வேண்டாம்.
நன்றாக நமிர்ந்து அமருங்கள் நில்லுங்கள் பின்புறம் வளைத்து செய்யும் உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
மார்பு வலி
ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். ஆடைகளை தளர்வாக்கிக் கொள்ளுங்கள். மருத்துவரை உடன் சென்று ஆலோசியுங்கள்.
தசைவலி
பூண்டு சேர்த்து காய்ச்சப்பட்ட சற்று சூடான கடுகு எண்ணையை பாதிக்கப்பட்ட தசைப் பகுதியில் தேய்த்து விடவும். சுளுக்கு தான் பெரும்பாலும் தசைவலிக்கு காரணமாக அமைகிறது. உடலை முறுக்கிக்கொண்டு செய்யும் கடுமையான வேலைகளை தவிருங்கள்.
மூட்டுவலி:-& நொச்சி இலையை கொதிக்க வைத்து பருத்தி துணியில் நனைத்து ஒத்தடம் தரவும்.
பொதுவாக எல்லா மூட்டு வலிகளுக்கும் தைலம் தேய்த்து குணப்படுத்துவது இயலாது. என்ன வகையான மூட்டுவலி என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றால் போல மருந்துகளை உள்ளுக்கு உட்கொள்வதற்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
உடல் அலுப்பு
மஞ்சள், இஞ்சி தூள் கைப்பிடியளவு கலந்த வெதுவெதுப்பான பசும் பால் அருந்தவும்.
உடல் அலுப்பு பொதுவாக காய்ச்சல் மற்றும் அதிக உடல் உழைப்பினால் ஏற்படுகிறது.
மேலும் ஆயுர்வேதம் உடல் அலுப்பு தீர அஸ்வகந்தா மற்றும் இரத மூலிகை மருந்துகளை கலந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை பரிந்துரைக்கிறது. உங்கள் உணவுப் பழக்கங்களை என்னவகையான உணவு சாப்பிட வேண்டும்? எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பது போன்ற விதிமுறைகளை வகுத்துக் கொள்வதுஅவசியம்.
மாதவிடாய் வலிகள்
அஜ்வைன் டிகாக்சனை வலி ஏற்படும் நேரங்களில் அருந்தலாம். அசோகா மற்றும் கற்றாழைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் மாதவிடாய் வலிகளை குணப்படுத்தும்.
மாதவிடாய் காலத்திற்கு முன்பு மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உண்டா, இல்லையா என்று அறிந்து கொண்டு சிகிச்சை அளிப்பது வேதனையைக் குறிக்கும்.
வாதக் கோளாறுகள் தான் மாதவிடாய் வலிக்கு பெரும்பாலும் காரணமாக அமைகிறது. வாத தோஷத்தை உண்டு பண்ணும் உணவு வகைகளை தவிர்ப்பது மற்றும் கட்டுப்பாடுகள் மேற்கொள்வதால் எல்லா வகையான வலிகளையும் குணப்படுத்த இயலும். மாதவிடாய்க் காலங்களில் பெரும்பாலும் ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.
மாதவிடாய் வலிகள் ஏற்பட முதன்மையான காரணம் என்று அறிந்து கொண்டு சிகிச்சை அளித்தால் மாதவிடாய் வலிகளின் பாதிப்பை குறைக்கலாம். என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மாதவிடாய் வலி காலங்களில் வலியினை உருவாக்கும் உணர்வு நரம்புகளை தற்காலிக நிவாரணியாக சற்றே செயல் இழக்க ஆங்கில மருத்துவத்தில் கையாளுகின்றர்.
ஆயுர்வேத மருத்துவத்தில் மேற்கூறிய நரம்பு சற்றே ரிலாக்ஸ் செய்ய அசைவ அரிஷடம், ஷோதிடவச் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
எந்த வகையான வலியும் நோய்களும் மனிதனும் மனிதன் மாறுபட்டதாக வேறுபாடுகளுடன் தான் இருக்கும். வீட்டு வைத்தியமாக வலி குணமாவதற்குறிய வழிமுறைகளை நாங்கள் குறிப்பிட்டு இருந்தாலும் மேற்கூறிய வலி மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் அதற்கு தீர்வுகாண தேர்ச்சி பெற்ற மருத்துவரை அனுகுதல் அவசியம்.
பாக்யா