ஓரிதழ்தான்.. பட் பவர்ஃபுல்

Spread the love

ஓரிதழ் தாமரையானது தாமரை மலர் போல இதுவும் நீரில் வளரும் ஒன்று என்று நினைத்தீர்கள் என்றால் அது தவறு… இது நிலத்தில், வயல் பரப்புகளில் அதிகமாக வளரும். ஓரிதழ் தாமரை என்பது ஒரு இதழையே பெற்றிருக்கும். இதன் நிறம் ரோஜாப்பூவின் நிறம் பெற்றிருக்கும். ஓரிதழ் தாமரை மலர் பூமியை நோக்கி தொங்கி கொண்டிருக்கும்.  தாமரை இனத்தின் பயன்களில் பெரும்பாலும் இதற்கும் உண்டு என்பதால் நம் முன்னோர்கள் இதற்கு ஓரிதழ் தாமரை என்று பெயரிட்டு இருப்பார்கள் என எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இம்மூலிகை சாதாரணமாக காணப்படுகிறது. சிறு செடிவகையான இதன் இலையை வாயில் இட்டு சுவைக்க வாயில் கொழ கொழப்பு திட்டும். இதன் இழை, தண்டு, பூ, வே, காய் அனைத்துமே மருத்துவக் குணமுள்ளது.

தாவரவியல் பெயர்: சுபருட்டிகோசம் ஹைபந்தஸ் என்னெஸ்பெர்மஸ்

ஓரிதழ் தாமரை ஆங்கிலத்தில் ஸ்பேட் ப்ளவர் என்றும் இந்தி, தெலுங்கில் – ரத்ன புருஷ் என்றும் மலையாளத்தில் ஓரிலை தாமரை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆண்களுக்கு உதவும் ஓரிதழ் தாமரை:

ஆண்களில் ஒரு சிலருக்கு இல்வாழ்க்கையில் உடலுறவில் நாட்டம் மிகக்குறைவாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் உடலில் ஏற்படும் ஒரு சில பாதிப்புகள் தான். செக்ஸ் உணவை தூண்ட வல்லது டெஸ்ட்ரசோன் என்னும் ஹார்மோன். இது சுரப்பது குறைவாகவோ, தடைபட்டாலோ உடலுறவில் திருப்தியாக செயல்பட இயலாது. மேலும் உடலுறவில் பெண்ணை திருப்திப்படுத்த முடியாமல் விந்து முந்துதல், உடலுறவிற்கு முன்பே ஆண்குறி சிறுத்துப்போதல், ஆண்குறி எழுச்சி அடையாது காணப்படுதல் போன்ற குறைபாடுகளும் காணப்படும்.  இதனை வெளியில் சொல்ல முடியாமல் போலி மருத்துவர்களை அணுகி போலி மருந்துகளை உட்கொண்டு மேலும் உடலைக் கெடுத்துக்கொள்கின்றனர். இப்பிரச்சனையிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் சிறந்த மருந்தாக அமைகிறது.

ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய், அனைத்தையும் சேர்த்து சமூலம் என்று கூறுவார்கள்) நிழலில் உலர்த்தி, இடித்து பொடியை வடிகட்டி ஒரு கண்ணாடி ஃ பிளாஸ்டிக் பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும். மேற்கூறிய பொடியுடன் பால் சேர்த்துக் கலந்து தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு தொடர்ச்சியாக 48 நாட்கள் வரை அருந்தி வர வேண்டும். இதன் மூலம் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டரோசன் சுரப்பு அதிகரிக்கிறது. செக்ஸில் ஆர்வத்தையும், திருப்தியையும் தருகிறது.

மேக வெட்டை, புண்கள், காய்ச்சலை குணப்படுத்துகிறது

மேக வெட்டை நோயால் பாதிக்கப்பட்டவகள், ஓரிதழ் தாமரை சமூலம், பச்சைக் கற்பூரம், கேரோசனை மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு அனைத்தையும் இடித்து பசுவின் நெய்யில் கலந்து மேக வெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வர குணம் காணலாம். உடலில் உள்ள புண்களின் மீது பசுமையான செடியை பிடுங்கி சுத்தம் செய்து அரைத்து காய்ச்சலில் துன்பப்படுபவர்கள், ஓரிதழ் தாமரையின் சமூலத்தினை கசாயம் செய்து அதனை அருந்தி வர வேண்டும். இரைப்பு நோயும் குணமாகும்.

ஓரிதழ் தாமரை குணப்படுத்தும் நோய்கள்

ஓரிதழ் தாமரையில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. ஓரிதழ் தாமரையின் சமூலத்தின் கசாயம் அருந்தி வர உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. அலர்ஜியைப் போக்குகிறது. உடல் வலியை, அசதியை நீக்கும் நிவாரணியாகப் பயன்படுகிறது. இதற்கு காரணம் ஓரிதழ் தாமரையில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் ஓரிதழ் தாமரையைப் பயன்படுத்தும்போது (மற்ற நீரிழிவு மருந்துகளுடன்) பயன்படுத்தும் பொழுது அது இரத்தத்தின் சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்து விடுகிறது. ஓரிதழ் தாமரையின் மருந்தின் அளவு ஒரு கிலோவிற்கு 2000 மி.கி. என்றுள்ள பொழுது விஷத்தன்மை பெற்றுவிடுகிறது. அதனால் அதிக டோஸ் அளவு ஓரிதழ் தாமரை சூரணம், கசாயம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பம் அடைந்த பெண்கள் கண்டிப்பாக ஓரிதழ் தாமரை சமூலம், கசாயம், பொடி எவ்வகையிலும் பயன்படுத்தக் கூடாது. மீறினால் கருவானது கலைந்து விட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது.

தூக்கமின்மை நோயைக் குணப்படுத்துகிறது.

இரவு, பகல் என்று நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிபவர்கள், படிப்பில் மும்முரமாக இருந்து தூக்கத்தைக் கெடுப்பவர்கள் தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறாகள். நேரத்திற்கு உணவு கொள்ளாமல் இருப்பதாலும் அவர்கள் சரியான தூக்கம் பெறாமல் அவதிப்படுகிறார்கள். இத்தகைய பாதிப்புகளில் இருந்து குணம் பெற ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி இடித்துப் பொடி செய்து பால் சேர்த்துக் கலந்து காலை, மாலை என தினசரி இரு வேளை அருந்தி வர வேண்டும்.

இரத்த சோகையை குணப்படுத்தும் ஓரிதழ் தாமரை

எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, உடலில் அதிகமான அசதி, தூங்க வேண்டும் போல இருக்கும். ஆனால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு எடுக்காது. இதனால் ஏற்படும் உடல் வலி, அசதி காரணமாக எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம் கூடும். எந்த செயலை செய்ய வேண்டுமானாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, ஆர்வமின்மை, உற்சாகமின்மை உட்கார்ந்த இடத்தில் சாப்பிட வேண்டும், எழுந்து டைனிங் டேபிளில் சாப்பிட வேண்டுமே என்ற அலுப்பு, எண்ணம் இவையெல்லாம் மனிதனின் உடலில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதால் ஏற்படும் விளைவுகள். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது இரத்தம் நல்ல சிகப்பு நிறமாக காணப்படுவதுடன், உடலில் இரத்த ஓட்டத்தின் போது நுரையீரலுக்குச் சென்று, அந்த மூச்சுக் காற்றிலுள்ள ஆக்சிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு இரத்தம் உடல் முழுவதும் பரவும் பொழுது தன்னில் ஏற்கும் கழிவு பொருட்களை கார்பன் டை ஆக்சைடாக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக இரத்த ஓட்டமாகி உடலுக்குச் சக்தியைத் தருகிறது. மேலும் நாம் உண்னும் உணவிலுள்ள சத்துக்களை இரத்தத்தில் ஏற்றுக் கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. மேற்கூறிய இரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவு அதிகரிக்க இரும்புச் சத்து அதிகம் உள்ள ஓரிதழ் தாமரை சமூல சூரணம் பயன்படுகிறது. சூரணம் பயன்படுத்துவது உங்கள் வயது, உடல் தன்மை, நோயின் தன்மை அறிந்து உட்கொள்ளப்பட வேண்டும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வது நல்லது.


Spread the love