உலகில் இருதயக் கோளாறு மற்றும் மாரடைப்பு காரணமாக பலர் மரணம் அடைகிறார்கள். ரத்தத்தில் இருவகையான கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. அவை 1. எச்.டி.எல். (ஹைடென்சிட்டி லிப்போ புரோட்டீன்ஸ்) 2. எல்.டி.எல். (லோடென்சிட்டி லிப்போ புரோட்டீன்ஸ்) இதில் எச்.டி.எல். சத்து 40 மில்லி கிராம் சதவீதத்துக்குக் குறையக் கூடாது. அதேபோல் எல்.டி.எல். அளவு 100 மில்லி கிராம் சதவீதத்துக்கு குறைவாகவே இருக்க வேண்டும்.
ரத்தத்தில் கொழுப்பு, தேவைக்கு அதிகமாகச் சேருவதையும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்க எச்.டி.எல். சத்து உதவுகிறது. தினமும் 2 அல்லது 3 கிளாஸ் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் ரத்தத்தில் எச்.டி.எல். அளவு அதிகரிக்கிறது என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஹெஸ்பிரிடின் என்ற சத்து காரணமாக அமைகிறது. எனவே, தினமும் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் மாரடைப்பு மற்றும் இருதயக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என டாக்டர்கள் யோசனை கூறியுள்ளனர்.