ஜாவா, சுமத்ரா, போன்ற தீவுகளில் வசிப்பவர்கள் நோயாளிகள் படுத்து இருக்கும் அறைகளில் நச்சுக் கிருமிகளை அழிக்கும்பொருட்டு, தினமும் வெங்காயத்தைப் போட்டு வைப்பார்கள்.
நீரோ மன்னன் தனது குரல் வளத்துக்காக பச்சை வெங்காயத்தை உண்டு வந்தான்.
பிஸினி என்னும் வரலாற்று ஆசிரியர் வெங்காயம் 27 நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையுடையது என்கிறார்.
உலக அற்புதங்களில் ஒன்றாகிய பிரமிட் கோபுரங்களைக் கட்டிய தொழிலாளர்களுக்கு அவர்தம் உணவிற்காக வெங்காயம் வழங்கும் பொருட்டு 9 டன் பொன் செலவழிக்கப்பட்டதாக வரலாற்று ஏடுகள் சொல்கின்றன.
எகிப்தியர்கள் வெள்ளைப்பூண்டையும், வெங்காயத்தையும் தெய்வமாக வணங்கினர். இவற்றின் மீது ஆணையிட்டும் வந்தனர்.
ஆயுர்வேதம்.காம்