இதயத்துக்கு இதம் வெங்காயம்

Spread the love

வெங்காயத்தினை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள அதிக இரத்த அழுத்த வகை நோயுள்ளவர்களுக்கு இரத்த அழுத்த அளவை குறைக்க உதவும்.

பொதுவான சளி மற்றும் இருமல்:

3 அல்லது 4 தேக்கரண்டி வெங்காயச்சாறுடன் அதே அளவு தேன் கலந்து தினசரி உட்கொண்டு வர சளி கட்டுப்படும்.

மாரடைப்பு வராமல் தடுக்க:

ஒருவர் நாள் ஒன்றுக்கு 100 கிராம் அளவு வெங்காயம் உணவில் சேர்த்துக்கொள்ள இதயம் நன்கு வேலை செய்யும். இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவும் குறைந்துவிடும்.

மூலவியாதிக்கு:

வெங்காயம் 30 கிராம் எடுத்துக்கொண்டு தண்ணீர்  விட்டு அரைத்து60 கிராம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள் தினசரி இரண்டு வேளை இதனை சாப்பிட்டால் சில நாட்களுக்குள் மூலம் குணமாகும்.

சிறுநீரக கோளாறு & சிறுநீர்கழிக்கும்போது எரிகின்றதா? வெங்காயம் 6 கிராம் எடுத்துக்கொண்டு 500 கிராம் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக ஆனவுடன் அதனை குளிர்வித்து வடிகட்டி அதனை அருந்திவர சிறுநீர்க்கடுப்பு விலகும்.

சிறுநீர் கழிப்பதில் சிரமமா?

வெங்காயத்தை எடுத்து கல்லில் தண்ணீர் விட்டு தேய்த்து அதனை சர்க்கரை 60 கிராம் அளவு கலந்து உள்ளுக்குள் கொடுத்துவர சிறுநீர் தாராளமாக வெளியேறும்.


Spread the love