ஒமேகா-3 என்பது நம் உடலிற்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலமாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இயற்கையாக நம் உடலில் உருவாகுவதில்லை. இது நாம் உண்ணும் உணவின் மூலம் நமக்கு கிடைக்கின்றது.
இது சரும பாதுகாப்பிற்காகவும், நுகர்வு முகப்பரு பிரச்சனையை குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. இது கரடு முரடான வறண்ட சருமத்தை மென்மையாக்கி, எரிச்சல், தோல் அலர்ஜி, சருமத்தின் வறட்சி, சிவந்து காணப்படுதல், மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்ற அறிகுறிகளுக்கு எதிராக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கிறது.
ஒமேகா 3 இதய இரத்தநாள செயல்பாடு, ஆரோக்கியமான மூளை வளர்ச்சி, புற்று நோய், மன அழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு போன்ற பல பிரச்சனைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பெரிய பங்காற்றுகிறது. இது ட்ரைகிளிசரைட் அளவை குறைப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இது சருமத்தில் சீரான நிறத்தை மேம்படுத்தி வயதான தோற்றத்தை குறைக்கும் தன்மையுடையது.
ஒமேகா 3 உடலில் குறைவதன் அறிகுறிகள்
ஒமேகா-3 என்பது சருமத்தின் வெளிப்புறத் தோலில் உள்ள கொழுப்பு உள்ளடக்கத்தின் முக்கிய பகுதியாகும். இது வியர்வையை வெளியேற்றி ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. இது குறைவதால் சருமம் வறண்டு போதல், முகப்பரு அதிகரித்தல், சருமம் சுருங்குதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
ஒமேகா-3 உணவு பொருட்கள்
எண்ணெய் சத்துள்ள மீன், வால்நெட், பிளாக் சீட் எனப்படும் ஆளி விதை எலுமிச்சை, கொய்யா, பீன்ஸ், வால்நட், சியா விதைகள் ஆகியவை ஒமேகா-3 நிறைந்துள்ள இந்திய உணவுப் பொருளாகும்.
அக்ரூட் பருப்புகள்
இது சரும செல்களுக்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
சியா விதைகள்
சியா விதைகளை சாலட் அல்லது ஸ்மூத்திகளில் மூலப் பொருளாக பயன்படுத்தலாம். இதனை பாலுடன் கலந்து உண்ணலாம். சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்தும் குடிக்கலாம்.
ஆளி விதைகள்
ஆளி விதையில் மெக்னீசியம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.
ஒமேகா-3 மீன் வகைகள்
முரண் கெண்டை, சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, நெத்திலி, ஹாலிபட், ரெயின்போ, ட்ரவுட், சூரை மீன் போன்ற மீன் வகைகளில் அதிக அளவு ஒமேகா-3 நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வர சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
நெத்திலி மீனில் அத்தியாவசிய பேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள சருமப் பிரச்சனைகள் வருவது தடுக்கப்பட்டு, சருமம் பொலிவுடன் காணப்படும். இதனை வாரம் ஒரு முறை என தவறாமல் உண்ணலாம்.
மீன் எண்ணெய் மாத்திரை
மீன் மாத்திரை என்பது மீன்களின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு நன்கு சுத்திகரிக்கப்படுகிறது. பின் [Capsule] மாத்திரையில் அடைத்து விற்கப்படுகிறது.
மீன் மாத்திரையை தொடர்ந்து உண்ணுவதால் நமது தோலின் ஈரத்தன்மை தக்கவைக்கப்படுகிறது. இதனை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் உண்ணலாம். கர்ப்பிணி பெண்கள், பிற நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனையின்படி உண்ணலாம்.
அதிகளவு மீன் சாப்பிடுவதும் நல்லது தான். தினமும் மீன் சாப்பிட முடியாது என்பதால் இவ்வகை மாத்திரைகளை உபயோகிக்கலாம். இத்தகைய சிறப்புமிக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை மீன் எண்ணெய் மாத்திரை மூலமாகவோ அல்லது மீன் உண்பதன் மூலமும் பெறலாம்.
ஒமேகா 3 அதிகமுள்ள உணவுகளை அனுதினமும் உட்கொண்டு வர சரும பாதுகாப்பு மேம்பாடு அடைந்து கூந்தலும் பலப்படும்.
ஆயுர்வேதம்.காம்