ஆலிவ் மரமானது பசுமை மாறாத ஆலியேக் என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. மத்திய தரைக்கடல் ஆப்ரிக்கா, ஆசியா பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஆலிவ் மரம் நன்கு வளர்வதற்குரிய சீதோஷ்ண அமைப்பு மேற்கூறிய பகுதிகளில் காணப்படுவதால் நன்றாக வளர்கிறது.
சுமார் 1000 ஆண்டுகள் வரை ஆலிவ் மரம் வளரக்கூடியது. என்றால் உங்களுக்கு ஆச்சர்யம்தானே மோசமான! சூழ்நிலைகளால் ஆலிவ் மரம் துண்டாக வெட்டப்பட்டாலும், சேதப்படுத்தப்பட்டாலும் கூட மீண்டும் நன்றாக செழித்து வளரக் கூடியது. ஆலிவ் மரத்தின் பயன்களும் காரணம் அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல் ஆன்டிஆக்சிடன்ட் இருப்பதுதான் தான்.
ஆலிவ் இலை
உடலில் மறைந்துள்ள நோய் கிருமிகள் தான், புற்று நோயிலிருந்து இதய நோய் வரை பல வியாதிகள் உருவாவதற்கு காரணமாக அமைகிறது.
ஆலிவ் இலை தொற்று நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் பண்பு, இதயத்தினை பாதுகாக்கும் மருத்துவப் பண்புகள் காரணமாக மேற்கூறிய நோய்கிருமிகள் அழிந்து போக உதவுகிறது.
ஒலிரோபெயின் என்ற கசப்பான பொருளானது பசுமையான ஆலிவ் இலையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்பு சற்றே கசப்பாக இருக்கும். இதனை பிரித்தெடுத்து மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ‘ஒலிரோ பெயின்’ வைரஸ், பூஞ்சைகாளான், பாக்டீரியா, ஒட்டுண்ணி கிருமிகளுக்கு எதிராக வினைபுரியும். பழங்கால எகிப்தியர்கள் தங்களை ஆண்ட அரசர்களின் இறந்த உடல்களை கெடாமல் பாதுகாப்பதற்கு ஆலிவ் இலை எண்ணெயை பயன்படுத்தினர் அதன் பின்னர் காய்ச்சலுக்கும் பயன்படுத்தினர்.
ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு முதல் மலேரியா காய்ச்சலுக்கு கொய்னா மருந்தைவிட ஆலிவ் சிறப்பான ஒன்றாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆலிவ் இலையில் பயோஃபிளாவனாய்ட்ஸ் (இயற்கை வைட்டமின்’சி’ யின் உதவியாளர்கள்) ரூடின், லூட்டோவின் மற்றும் ஹெஸ்பெரிடின் மருந்துப் பொருட்கள் உள்ளன.
இது மட்டுமல்லாமல் வைட்டமின் ‘சி’ யின் எண்ணிலடங்கா பயன்கள், மன அழுத்தம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் ஆகவும் பயன்படுகிறன. பயோ ஃப்ளாவனாய்ட்ஸ் capillary wallv – ஐ பராமரிக்க அவசியமான ஒன்றாகும். பின் மிக நீண்ட நாட்களாக தொற்றுநோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டள்ள 90% நோயாளிகள் ஆலிவ் இலையின் பிரித்தெடுக்கப்பட்ட சாற்றை உட்கொள்ள பக்க விளைவுகள் கிடையாது
ஆலிவ்பூ:& ஒவ்வொரு வருடத்திலும் மே மதல் ஜீன் மாதத்தில் ஆலிவ் பூவானது பூக்கும்.சிறிய பாவாடை நிறத்தில் பூக்கும் பூக்களானது, பூக்கும் பொழுது நறுமண வாசனை அளிக்கிறது. பழங்காலத்தில் ஆலிவ் பூ வானது மணப்பெண்ணின் அரங்காரத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போது வாசனை திரவியங்கள் தயாரிக்க இதுவும் ஒரு தேவையான பொருளாக அமைந்துள்ளது.
ஆலிவ் பழம்
ஆலிவ் பழம் நன்றாக காய்த்து பறிக்கப்படும் பொழுது எமரால்டு பச்சையில் இருந்து பர்பிள் (purple) காணப்படும். ஆலிவ் பழமானது அதன் அளவு, தோற்றம், எண்ணெய் மற்றும் வாசனைகள் அடங்கிய சரியான ஆலிவ் பழம் பறிப்பதற்கு நீண்ட, சூடான விளைச்சல் பருவம் தேவைப்படுகிறது. விளச்சல் பருவமானது தரமான எண்ணெய் பிரித்தெடுக்கக்கூடிய மிகச் சரியான பருவமாக இருத்தல் வேண்டும்.
ஆலிவ் எண்ணெய்
பழங்காலத்தில் ஆலிவ் எண்ணெயானது ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர்களின் உடலின் தசை வலிக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆலிவ் எண்ணெயின் பல்வேறு பயன்பாடுகளை தெரிந்து கொண்டனர்
ஆலிவ் எண்ணையானது வெளுப்பான பொன்னிற நிறத்தில் காணப்படும் ஆலிவ் விதைகள் நசுக்கியும் அழுத்தியும் எண்ணை எடுக்கப்படுகிறது. முதல் அழுத்தம் விதையில் செயல்படுத்தும் பொழுதே பிரித்தெடுக்கப்படுகிறது என்பதுடன் அதிக அளவு வாசனையும், ஆன்டி ஆக்சிடன்டும் உள்ளது. ஆலிவ் எண்ணை சமையல், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்து தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
மேனி அழகு பராமரிப்பால் சருமத்தை சுத்தம்செய்ய சரும பிரச்சனைகளை குணப்படுத்த, ஈரப்பதத்துடன் வைத்திருக்க பல ஆண்டுகளாக ஆலிவ் எண்ணய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.