60 அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. பெரும்பாலும், இப்பிரிவிலுள்ளவர்கள்தான் சத்துணவுக் குறைபாட்டால் ஏற்படும் சுகாதார அபாயங்களுக்கு அடிக்கடி உள்ளாகின்றனர். பல்வேறு ஆதாரங்களிலிருந்து கிடைத்த சாட்சியங்களின்படி தங்களது ஆற்றல் மற்றும் சத்துணவுத் தேவைக்ளுக்கேற்ற அளவு மற்றும் வகையான உணவுகள் பெரும்பாலான முதியவர்களுக்குக் கிடைப்பதே இல்லை. வளரும் நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் உள்ள முதியோர்கள் தற்சமயம் இரட்டைப் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். சமூக மற்றும் புவியியல் மாற்றங்களால் அவர்களுக்குக் குறைவான சத்துணவு கிடைப்பதுடன் கொழுப்பு, மிருகங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவு ஆகியன அதிகமாக இருக்கும் உணவுகளும், நார்ச்சத்து குறைவான உணவும் கிடைப்பதால், முதியோர்களிடையே அதிக எடை போடுவது மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு ஆளாவது ஆகியன அதிகரித்துவிட்டன. எனவே, சத்துணவுத் தேவைக்கான பரிந்துரை செய்ய ஏதுவான தகவல்கள் போதிய அளவில் கிடைக்காத காரணத்தினால் முதியவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை அளிப்பது என்பது பெரும் சவாலாக ஆகிவிட்டது.
முதுமையின் விளைவுகள்
மக்களுக்கு வயதாகும்போது, நல்ல ஆரோக்கியமான சத்துணவுப் பழக்கங்கள் உருவாவதற்கு பல்வேறு சிகிச்சை அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. பல்வேறு காரணிகளால் ஏற்படும் மோசமான சத்துணவு உண்ணும் பழக்கத்தை விட்டு வெளிவருவதற்கு உடலியல், உளவியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களும் அவசியமாகும்.
உடலியல் மாற்றங்கள்
வயதாகும்போது உடலின் செயல்பாட்டின் வேகம் குறைகிறது. மேலும், பழுதடைந்த செல்களுக்குப் பதிலாக புதிய செல்களை மாற்றி வைக்கும் அதன் திறனும் குறைந்து விடுகிறது. உடலியல் விகிதம் குறைந்து, வாழ்நாள் வரை 30% வரையும் குறையும் வாய்ப்புண்டு. இதனால் உடலின் கலோரி தேவைகள் கூடுதலாவதுடன் வயதாகும் நபரால் ஆற்றல் தேவைகள் மற்றும் உணவு உட்கொள்ளுதல் ஆகியவற்றைச் சமப்படுத்த ஏற்படும் சிரமமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்கி விடுகிறது. கலோரி தேவைகள் குறைவாகவே இருந்தாலும், தேவையான கலோரிகள் கிடைக்காத காரணத்தால் முதியோர் பலரிடம் எப்போதும் களைப்பு, மனச்சோர்வு மற்றும் குறைந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி ஆகியன காணப்படுகின்றன. நமக்கு வயதாகும்போது நமது உடலின் கட்டமைப்பு மாறி ஒல்லியான திசுக்களின் எடை (25% வரை) குறைந்து உடல் கொழுப்பின் அளவு அதிகமாகிறது. உணவிலுள்ள புரோட்டீன்களை முதியோர்கள் குறைந்த அளவே செலவழிப்பதால் இப்பிரச்சினைகள் விரைவாகவே உடலில் தோன்றும். மேலும், தங்களது ஒல்லித் திசுக்களின் எடையைப் பராமரிக்க முதியவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டதை விடவும் அதிகத்தரம் வாய்ந்த புரோட்டீன் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
எலும்புகள் வலுவிழப்பதுடன் .செய்ததைப்போல் குவிமையம் செய்ய சிரமப்படுகின்றன; சிலருக்கு ‘காடராக்ட்’ அறுவைச்சிகிச்சை அவசியமாகிறது. பல் பலவீனமடைதல் பெரும்பாலோரிடத்தில் காணப்படுவதுடன், காது கேட்பது, சுவை அறிவது மற்றும் வாசனையை நுகர்வது ஆகியவை குறைய ஆரம்பிக்கின்றன. ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் என்சைம்கள் சுரப்பது குறைந்து விடுவதால் ஜீரணப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனால் வைட்டமின் பி-12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பும் உண்டு. குடல்களின் செயல்பாடு குறைய ஆரம்பிப்பதால் மூச்சுத்திணறல் மட்டும் பேதி ஆகியன உண்டாகின்றன.
உளவியல் மாற்றங்கள்
வயதானாலும் உணர்ச்சிகள் என்னவோ வயதுக்கேற்றாற்போல் குறைவதில்லை. சொல்லப்போனால், வயதாகும்போது உளவியல்-சமூகப் பிரச்சினைகள் அதிகமாகி, அதனால் மனச்சோர்வு, பசியின்மை ஆகியன ஏற்படுகின்றன. முதியோர்கள் பரவலாகச் சொல்லும் குறை என்னவெனில் அவர்களுக்கு ஒருவருக்காகச் சமைக்கப் பிடிக்கவில்லை என்பதும் வீட்டிலோ வெளியிலோ தனியாக அமர்ந்து சாப்பிடப் பிடிக்கவில்லை என்பதும்தான். குடும்பத்துடன் வாழ்பவர்களை விடத் தனியாக வாழும் முதியவர்களின் உணவுத் தேவைகள் குறைவாக இருப்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனால் அவர்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவுதான் குறைவாக இருக்கிறது. தாழ்வு மனப்பான்மை இருந்தாலும் சாப்பிடுவதில் உள்ள ஆர்வம் குறையக்கூடும்.
பொருளாதார மாற்றங்கள்
வயதாகும்போது ஓய்வுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாவிட்டால், அது அவருடைய சத்துணவு உட்கொள்ளும் பழக்கத்தைப் பாதிக்கும்; விலையுயர்ந்த பொருட்களாகிய பால் முதலியவற்றையும் அதன் துணைப்பொருட்கள், கால்சியம் நிறைந்த இறைச்சி, பழங்கள், உலர்ந்த பழங்கள் கடலைகள் ஆகியவற்றையும் புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, பி-வைட்டமின் மற்றும் முக்கிய ஆக்ஸைடு எதிர்ப்புப் பொருட்களையும் உட்கொள்ளும் மனநிலை இருக்காது. பொதுவாகப் பார்க்கும்போது, வருமானம் குறையக் குறைய வித்தியாசமான / போதுமான உணவு உட்கொள்வதும் குறைகிறது என்று தெரிய வந்துள்ளது.
ஆதாரம் : ஹெல்ப் ஏஜ் இந்தியா
மேலும் தெரிந்து கொள்ள…
https://www.youtube.com/channel/UCVomVtXE3uRJ9PKz088mQFQ/featured