எண்ணெய் வழியும் முகத்திற்கு மிக எளிய அழகு குறிப்பு…

Spread the love

எண்ணெய் சருமத்திற்கு எந்த மாதிரியான சூழ்நிலையானாலும், சகிக்க விரும்பாது… அதே சமயத்தில் தீர்க்க முடியாத பிரட்சனை என கூறமுடியாது… இதற்கு என்ன வழி என்று இணையதளத்தில் தேடினாலும், அது அதிகமான பிரச்சனைகளுக்கான அறிகுறியை காட்டும்…


கற்றாழை, எலுமிச்சை, பின் வெள்ளரிக்காய்.. இந்த மூன்றும் எண்ணெய் வழிகின்ற முகத்திற்கு நல்ல தீர்வை தருகின்றது…. இதற்கு தினமும் ஒரு அரை மணிநேரம் ஒதுக்குங்கள்.. கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் பூசி ஒரு 20 நிமிடத்திற்கு ஊறவிடவும்.. பின் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவவும்… இதே வழிமுறையை எலுமிச்சை சாற்றுக்கும்,  வெள்ளரிக்காய்க்கும் பயன்படுத்தலாம்…
அடுத்ததாக, ஒரு ஆப்பிள் இரண்டு டீஸ்பூன் l.. ஆப்பிளை தோல் நீக்கி, அதை சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் தேன் கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து முகத்தில் தடவவும்….பின்20 நிமிடம் கழித்து சுடுநீரால் கழுவவும்…


இந்த மாதிரியான முக பிரச்சனை உள்ளவர்கள் வீட்டில் எப்பொழுதும் பாதாம் ஆயிலை வைப்பது அவசியம்.. எண்ணெய் சருமத்திற்கு, பாதாம் ஆயிலில் சில துளி எலுமிச்சை சாற்றை விட்டு,அதை முகத்தில் தடவி, ஒரு பத்து நிமிடம் கழித்து கழுவி வர எண்ணெய் வழிவது குறைய ஆரம்பிக்கும்… இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் முகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்..


எண்ணெய் பசையின் தீவிரம் அதிகமாகும் போது, பப்பாளி பழத்தை அறிந்து, அதில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு மசித்து, முகத்தில் பேக் போட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.. ஒவ்வொரு தடவையும் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். எண்ணெய் வடிகின்ற முகத்திற்கு இயற்கை வைத்தியம் இருந்தாலும், உங்களின் டயட் மிகவும் அவசியமாகும். எப்பொழுதும் சத்தான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவது,உங்கள் சரும பராமரிப்பிற்கு மிகவும் நல்லது.


Spread the love