சமையலுக்கு ஏற்ற எண்ணெய்கள்

Spread the love

நம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் பொருட்களுள் எண்ணெயும் ஒன்று. சமையல் என்றாலே எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியாது, எண்ணெயில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு எண்ணெயிலும் என்ன பயன்கள் உள்ளன என்பதை பார்ப்போம் வாங்க.

நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த இடத்துக்கு தகுந்த மாதிரியான எண்ணெய் பயன்படுத்துவார்கள். உதாரணமாக கேரளாவில் தேங்காய் எண்ணெய் பயன் படுத்துகிறார்கள்.

வடக்கு பகுதிகளில் கடுகு எண்ணெய் அதிகமாக பயன் படுத்துவார்கள். மத்திய இந்தியாவில் கடலை எண்ணெயை அதிகமாக பயன் படுத்துகிறார்கள். தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் தான் கொழுப்பு அதிகமாக பரவ தொடங்கியது. சூரிய காந்தி எண்ணெய் மிகவும் பிரபலமாக தொடங்கியது.

ஆனால் இப்போழுது இன்னும் நிறைய வகையான எண்ணெய் வந்துவிட்டது. சமையலுக்கு எந்த எண்ணெய் நல்லது மற்றும் நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

நாம் அதிகமாக பயன்படுத்தும் சூரியகாந்தி பற்றி இப்பொழுது பார்ப்போம். சூரியகாந்தி எண்ணெயில் நிறைய வைட்டமின் ணி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் உயர் வெப்பநிலையில் இந்த எண்ணையை சூடு செய்தாலும் இந்த எண்ணெயின்  ஊட்டச்சத்து குறைவதில்லை. அதனால் தான் பொரிப்பதற்கு சூரிய காந்தி எண்ணெயை அதிகமா பயன் படுத்துகின்றோம்.

ஆனால் இந்த எண்ணெயை சமையலில் சேர்த்து கொள்வதால் நம் உடலில் சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. அதனால் நீரிழிவு நோயாளிகள்  சிறிது கவனமாக இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் நிறைய நிறைவுற்ற கொழுப்பு இருக்கிறது. அதுனால் நம் இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.

கடலை எண்ணெய், இந்த எண்ணெயில் நல்ல கொழுப்பு இருப்பதால் எல்லா விதமான சமையலுக்கும் நல்லது கடலை எண்ணெய்.

கடுகு எண்ணெய், இந்த எண்ணெயில் எருசிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. அதனால் நம் உடம்பிற்க்கு நல்லது இல்லை. அதனால் சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கனோலா எண்ணெய், இந்த எண்ணெய் தான் இப்பொழுதெல்லாம் சந்தையில் பிரபலமாக இருக்கிறது, இந்த எண்ணெய் இருக்கின்ற எல்லா எண்ணெய்களையும் விட ஆரோக்கியமானது. இந்த எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவே உள்ளது. இந்த எண்ணெயில் ஒமேகா 3 இருக்கிறது.

ஆலிவ் எண்ணெய் நம் இதயம் மற்றும் உடல்நலத்திற்கும் நல்லது. ஆலிவில் இருந்து எடுப்பது தான் ஆலிவ் எண்ணெய். இது சிறிது வெளிர்த்தது போன்று இருக்கும். ஆனால் ஆலிவ் எண்ணையில் பொரிக்க usமீ முடியாது.

அரிசி தவிட்டு எண்ணெய், இது அரிசியின் மேல் பகுதியில் இருந்து எடுக்கும் எண்ணெய் தான் இது. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது இந்த எண்ணெய் என்று கூறுகிறார்கள் ஆனால், அதற்கான எந்த சான்றும் இல்லை. நமக்கு உடலிற்கு தீங்கு விளைவிக்காத எண்ணெயில் சமைத்து மகிழ்சியுடன் வாழ்வோம். 

சத்யா


Spread the love
error: Content is protected !!