இப்படி வாய் கொப்பளித்தால் பல வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம்.

Spread the love

தற்போது பேஷனாக சொல்லப்படுவது, முன்னோர்கள் காலத்திலேயே வழக்கமாக இருந்து வருகிறது. காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின்பு தான் அடுத்த வேலையை பற்றி நினைப்போம். அதுவும் அதிகாலையில் தான், முக்காவாசி நோய்கள் நமது வாய் மூலமாக பரவ வாய்ப்பு உள்ளது. 

காலையில் எழுந்ததும், பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், இவற்றில் ஏதாவது ஒரு எண்ணெயை 1-2 டீஸ்பூன் எடுத்து வாயில் விட்டு, வாய் முழுவதும் படுமாறு 2 நிமிடத்திற்கு நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெயின் தன்மை நீர்த்து, நுரை தெரியும் வரை கொப்பளிக்கலாம். எதனால் இந்த ஆயில் புல்லிங்,! அதான் தினமும்  பல் துலக்குகிறோமே? என நினைக்கலாம். 

பல வகையான நுண் கிருமிகளுக்கு நம் வாய்தான் வாசல் கதவாக உள்ளது. இந்த மாதிரியான கிருமிகளை, ஆயில் புல்லிங் செய்வதனால், கொடிய விடாபிடியான கிருமிகளை அழித்து, அதனால் உண்டான நச்சு வேதி பொருட்களையும் வெளியேற்றலாம். இது பல வருடத்திற்கு முன்பாகவே நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக பதிவுகள் சொல்லுகிறது. அந்த வகையில் மிகவும் முக்கிய பிரட்சனைகளை, இதனால் தடுக்க முடியும் என பண்டைய மருத்துவ குறிப்பில் இடம் பெற்றிருக்கின்றது. 

அதாவது நுரையீரல் நோய், புற்று நோய், இரத்த அழுத்தம், கல்லீரல் நோய், நரம்பு கோளாறு,மார்பக நோய், கருப்பை கோளாறு, மூட்டுவலி, முழங்கால் வலி, வாய்புண், வயிற்று கோளாறு,மலச்சிக்கல், தூக்கமின்மை போன்ற வியாதிகள் வராது என சொல்லப்படுகிறது. அதனால் பிரட்சனையில் இருந்து நம்மை முதலில் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் இரு வேளை ஆயில் புல்லிங் செய்து வாருங்கள்.  

ஆயுர்வேதம்.காம்


Spread the love