எண்ணை கொண்டு நச்சுத் தன்மையை நீக்குதல்

Spread the love

எண்ணையை வாயில் ஊற்றி கொப்பளிப்பது OilPulling, எனப்படும். இது ஆயுர்வேதப்படி நச்சுப்பொருள்களை அழிக்கும் வழியாகும். நம் உடல் ஆரோக்யத்திற்கு அவசியமானதாகும். எவ்வாறு ஆயில்புல்லிங்கைச் செய்வதென்று பார்ப்போம்.

காலையில் வெறும் வயிற்றில் இதைச் செய்யவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணையை எடுத்துக் கொள்ளவும். சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை மிகவும் நல்லது.

வாயில் விட்டு இருபது நிமிடங்கள்,கள, கள வென்று சப்தம் வருவது போல் சுழற்சி சுழற்சி, வாயில் எல்லாப் பகுதிகளில் படுமாறு வாயைக் கழுவவும் (Rinse oil).

வாயில் வைத்துக் கொப்பளிக்கும்பொழுது வேகம் வேண்டாம். மெதுவாகச் செய்யவும். தெளிவான எண்ணைஇருபது நிமிடங்களில் நன்கு கெட்டியாகி,வெள்ளை நிறமாகிவிடும். கள, கள,வென்று சப்தம் செய்து கொப்பளிக்கும்பொழுதுஉடலிலுள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும். ஆரம்பத்தில் கடினமாகயிருக்கும்.நாளடைவில் எளிதாகிவிடும்.

கவனிக்க:

இருபது நிமிடங்கள் இதைச் செய்ய வேண்டும். அதற்குக் குறைந்தால் நச்சுப் பொருட்கள் மறுபடியும்உடலில் சேர்ந்துவிடும். வாயை நன்கு சுத்தம் செய்து பல் தேய்க்கவும். பாக்டீரியா, விஷப் பொருட்கள் அகன்றுவிடும்.

இதன் பயன்கள் :

பற்கள் ஆரோக்யப்படும், வெள்ளைப் பற்கள், வலுவான ஈறுகள்,கரை நீங்குதல், வாய் நாற்றம் போதல் போன்றவை ஏற்படும். பற்கள் விரைவில்கெட்டுப் போகாது.

மூட்டு வலிகுறையும், விரைப்புத் தன்மை நீங்கும்.

சைனஸ் வேதனை, மூக்கில் இருக்கம் போன்றவை அகலும்.

ஒற்றைத் தலைவலி குறையும்.

ஆஸ்துமாவின் வேதனை குறையும்.

மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்தும்.

மாதவிடாய் நிற்கு முன் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

தோல் பளபளக்கும்.

உடலில் சக்தி பெருகும்.

தொண்டை, குரல், கண்கள், முகம் போன்றவை ஆற்றலுடன் விளங்கும்.

புகைபிடிப்பவர்கள், ஜங்க் புட் (junk food ) சாப்பிடுபவர்கள், குடிப்பழக்கம் கொண்டவர்கள் இதைத் தவறாமல் செய்ய வேண்டும்.

உணவு நலம் ஜனவரி 2014


Spread the love
error: Content is protected !!