எண்ணை குளியல் போடுங்க இதெல்லாம் நடக்கும்

Spread the love

வாரத்துல ஒருநாளைக்காவது எண்ணைத் தேய்ச்சு குளின்னும் நம்ம வீட்ல அப்பாவோ அம்மாவோ சொல்லிட்டே  இருப்பாங்க., நாம தான், அதையெல்லாம் ஒரு பொருட்டா நினைக்காம, இருந்துருவோம். உடல்ல இருக்கிற சூட்டைத்தணிக்குதுங்கிறதால, முன்னெல்லாம், எண்ணெய்  தேய்ச்சு குளிக்கிற பழக்கம் எல்லோருக்கும் இருந்துச்சுங்க. இப்பெல்லாம், நேரமிலைன்றதாலும், சோம்பேறித்தனத்தாலும் எண்ணெய் தேய்ச்சு குளிக்காமலேயே இருந்து விடுறோம். எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறதனால,எவ்ளவோ நன்மைகள் கிடைக்குதுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்குதுன்னு இப்ப பார்க்கலாம்ங்க.

1.நீங்க எண்ணை தேய்ச்சு குளிக்கும் போது, உடல்ல இருக்கிற சூடு குறையுதுங்க.

2.எண்ணெய் தேய்ச்சு குளிக்கும்போது, சருமம் மிருதுவாகவும், பளப்பாகவும் மாறிடுதுங்க.

3.நீங்க எண்ணை தேய்ச்சு குளிக்கிறதை பாலோ பண்ணிட்டு வந்தீங்கன்னா, உங்க தலைமுடியில, இளநரை வரவே வாரதுங்க. பொடுகு உங்க தலைமுடி பக்கம் எட்டிக்கூட பார்க்காதுங்க.

4.தலையில் எண்ணை தேய்ச்சு குளிக்கிற இன்னொரு முக்கியமான யூஸ்புல்லான விஷயம் என்னன்னா, தலை முடி கருமையாவும், நீளமாவும் வளரும்ங்க.

5.சிலருக்கு பார்த்தீங்கன்னா துாக்கமே வராமே அவதிப்பட்டு இருப்பாங்க. அப்படி துாக்கமே வராம அவதிப்படுறவங்க கூட, எண்ணெய் தேய்ச்சு குளிச்சாங்கன்னா, துாக்கம் அவங்க தாலாட்டும்ங்க.

6.உடல்ல சூடு அதிகமாகிறதால கண்ணெச்சரிச்சல் உள்ளவங்க தலையில், எண்ணை தேய்ச்சு குளிச்சா, கண்எரிச்சல் மாயமா போயிருங்க.

எண்ணை தேய்ச்சு குளிக்கிற பழக்கத்தை டெய்லி லைப்ல சேர்த்துக்கங்க.உங்க லைப் ஆரோக்கியமாக மாறிடுமுங்க.


Spread the love