உடல் வீக்கம் (Oedema)

Spread the love

சில சமயங்களில் உடலின் சில பாகங்கள் குறிப்பாக பாதங்கள், கணுக்கால் வீங்கிக் கொள்ளும். உடல் வீக்கத்தை ஆங்கிலத்தில் Oedema Dropy, என்றும் தமிழில் நீர்க்கோவை பாண்டு என்றும் சொல்வார்கள். உடல் திசுக்களில் அதிகமாக திரவம் சேர்ந்து விட்டால் இந்த வீக்கங்கள் ஏற்படும். சில வீக்கங்கள் இதய நோய், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பினால் ஏற்படலாம். சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகளும் உடலில் வீக்கங்களை உண்டாக்கலாம். கணுக்கால், பாதங்களில் ஏற்படும் வீக்கங்கள், புவி ஈர்ப்பு சக்தியனாலும், சில மருந்துகளை உட்கொள்வதாலும் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளாலும் வீக்கங்கள் தோன்றலாம்.

வீட்டு வைத்தியம் (கணுக்கால், பாதங்களில் ஏற்படும் சாதாரண வீக்கத்திற்கு)

  1. கால்களை தூக்கி வைத்துக் கொள்ளவும். ஒய்வெடுத்துக் கொள்ளவும். பகலில் தூங்க வேண்டாம்.
  2. உடல் எடை அளவுக்கு மீறி இருந்தால், குறைக்கவும்.
  3. உப்பு, வறுத்த பொருட்கள், தயிர் இவற்றை தவிர்க்கவும்.
  4. பப்பாளி பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும்.

5.  கடுகெண்ணை வீக்கத்தை குறைக்கும். சூடான கடுகெண்ணையை வீக்கத்தின் மேல் தடவலாம். இரண்டு தேக்கரண்டி கடுகை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை வீக்கத்தின் மீது தடவலாம்.

6.     வினிகரை (Apple Cider Vinegar) தடவலாம்.

7.     தினமும் இரு வேளை 10 லிருந்து 15 மி.லி. விளக்கெண்ணையை 1 கப் பாலுடன் எடுத்துக் கொள்ளவும்.

8.     வில்வ இலை சாற்றில் மிளகுப் பொடியை கலந்து, இந்த கலவையில் 1/2 தேக்கரண்டி அளவில் தினம் 2 வேளை உட்கொள்ளவும்.

9.     தாமரை இதழ்களை நசுக்கி களிம்பாக்கவும். இதில் 1/2 தேக்கரண்டி எடுத்து பாலில் கரைத்து தினமும் 2 வேளை அளவில் 15 நாட்கள் உட்கொள்ளவும்.

புனர்நவா மன்தூர் மற்றும் புனர்நவா குக்குலும் இதற்கான ஆயுர்வேத மருந்தாகும்.


Spread the love