உடல் பருமன் தரும் சிக்கல்கள்

Spread the love

மிக அதிக உடல் பருமன் கேலிக்குரியது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். குறைந்தபட்சம் நமது இந்திய ஜனத்தொகையில் 5% மக்கள் மிக அதிக குண்டானவர்கள். அதிக பருமன் மன உடல் கோளாறு என்று இந்திய மருத்துவம் குறிப்பிடுகிறது.

அதிக பருமனைக் குறைக்க தற்போது பல முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தெருவுக்கு தெரு உடல் எடையை குறைக்கும் நிலையங்கள் வந்து விட்டன. புதுப்புது ‘பத்திய’ உணவுமுறைகள், நூற்றுக்கணக்கான நூல்கள் உடல் பருமனைக் குறைக்கும் வழிகளைப் பற்றி, வெளிவந்திருக்கின்றன. இதனால் பயன் ஏற்பட்டுள்ளதா என்பது வேறு விஷயம்.

உலக சுகாதார நிறுவனம் உடல் பருமனை அதிக அளவு – இயற்கைக்கு மாறாக – கொழுப்புச்சத்து உடலில் சேர்ந்து ஆரோக்கியத்திற்கு அபாயமான நிலை என விளக்குகின்றது. பழைய காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்காக சாப்பிட்டார்கள். இப்போது சாப்பிடுவதற்காக வாழ்கிறார்கள்.

உடல் பருமனால் அவதிப்படுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – உடல் பருமனை குறைக்கலாம். வாழ்நாள் முழுவதும் அவதிப்பட தேவையில்லை.

உடல் பருமன் ஏற்படுத்தும் பிரச்சனைகள்

1. குறைந்த ஆயுள், 2. உடல் இயக்கம் மற்றும் உடலுறவு கொள்வது சிரமம், 3. களைப்பு, 4. உடல் துர்நாற்றம், 5. அதிக வியர்வை, 6. அதிக பசி, 7. அடங்காத தாகம்


Spread the love
error: Content is protected !!