ஓட்ஸ் எனும் புல்லரிசியின் கூழை தினமும் ஒரு வேளை உணவில் சேர்க்க இன்றே முடிவு செய்யுங்கள் அதிலும் குறிப்பாக எவ்வயதுப் பெண்களானாலும் அழகோடும் இளமையோடும் திகழ்ந்திட அன்றாடம் ஒட்ஸ் கூழை ஒரு வேளை உண்ண வேண்டும்.
1997 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஓட்ஸில் 24 விதமாக ஃபீனாலிக் கூட்டுப் பொருள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர் இவ்வகை ஃபீனாலிக் கூட்டுப் பொருட்கள் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் போல வயது முதிர்வை கட்டுப்படுத்தக் கூடியவை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியவை.
செல்களில் இருந்து அன்றாடம் கழிவுப்பொருள்களை சுரக்கக் கூடிய ஃப்ரீ ராடிக்கல் அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும் அதுவே புற்று நோய் வருவதற்கும் வழி வகுத்து விடும். அத்தகைய ஃப்ரீ ராடிக்கல்லை இந்த ஃபீனாலிக் கூட்டு பொருள்கள் தங்கள் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மையால் பிரித்து எடுத்து கழிவுப் பொருளாக வெளியேற்றிவிடுகின்றது. இதனால் புற்று நோய் ஏற்படுவது கட்டுப்படுகிறது.
கிஸ்மீஸீணீ ஷிணீtவீஸ்ணீ எனும் ஓட்ஸில் (கிஸ்மீஸீவீஸீ) (அவினின்) எனும் இரசாயனப் பொருள் அதிகமாக இருக்கின்றது இது நமது மத்திய நரம்பு 4 மண்டலத்தை தாண்டிக் கொண்டே இருக்கின்றது இதனால் எவ்வாறு சோர்வாக வரும் ஓட்ஸ் உணவை உட்கொண்டால் அவர் உடல் ரீதியாகவும் உள்ளரீதியாகவும் உற்சாகமாக எழுச்சியுடன் காணப்படுகின்றார். இதனை உணர்த்த ஜெர்மானியர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்ஸை பயிர் செய்து உபயோகித்து வருகின்றனர். இதனை பின்னர் உணர்ந்த சீனர்கள் சுமார் 100 ஆண்டுகளாகவும் அமெரிக்கர்கள் சுமார் 50 ஆண்டுகளாகவும் ஓட்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்க குதிரைகளுக்கு பந்தயத்தின் போது அதிகமாக ஓட்ஸ் கொடுக்கப்பட்டு வந்தது. 1997 ல் நடந்த ஓர் ஆய்வில் இதற்கும் காரணம் ஓட்ஸில் உள்ள அவினின் (கிஸ்மீஸீவீஸீ) எனும் இரசாயனப் பொருள் தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்ஸ் கூழை அருந்திய குதிரைகள் பந்தயத்தில் ஓட்ஸ் அருந்தாத குதிரைகளை விட அதி வேகமாக ஓடி பந்தயத்தில் ஜெயித்தது கண்கூடாக கண்டறியப்பட்ட உண்மை.
உலகியேயே அதிகமாக ஓட்ஸ் சாப்பிடும் நாடு சுவிட்சர்லாந்து ஆகும். இங்கு உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள மக்கள் ஓட்ஸையே பிரதான உணவாக கொண்டுள்ளனர்.
ஓட்ஸ் சாப்பிடுவதால் ஒரு விதமான திருப்தியும் உற்சாகமும் ஏற்படும். புகைப்பழக்கம், புகையிலைப் பழக்கம், டீ, காபி, குடித்தல் போன்றவற்றால் எவ்வாறு மனம் உந்தப்படுகின்றதோ அதே போல ஓட்ஸ் உண்பதால் மனரீதியாகவும், உற்சாகம் பிறக்கின்றது எப்போதும் இளமையாக திகழ ஓட்ஸ் சாப்பிடுங்க எனும் ஜெர்மானிய பழமொழியே இருக்கின்றது.
சீனாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் வளர்க்கும் வண்ண மீன்களுக்கு உணவாக ஓட்ஸ் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த மீன்கள் இனப்பெருக்கத்தில் அதிகமாக ஈடுபட்டது கண்டறியப்பட்டது. ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு லிபிடோ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து ஓட்ஸ் உணவாக கொடுக்கப்பட்டால் அவர்களது ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவு முற்றிலும் அகன்று விடுகின்றது. லிபிடோ எனும் உணர்ச்சி உந்துதலும் அதிகரிக்கின்றது. இதனால் மனக் கவலைகள் குறைகின்றன.
மனித மூளையில் உள்ள லிம்பிக் ஸிஸ்டம் என்ற அமைப்பு தூண்டப்படுவதால் இந்த இனப்பெருக்கக் குறைகள் அடியோடு அகலுகின்றன.
ஓட்ஸ் உண்ணுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் புதிய செல்கள் உருவாகி தமணி இறுக்கம் அகலும் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் குறையும், உடல் பலஹீனம் குறைந்து தேகம் ஆரோக்கியமடையும், உணர்ச்சி வேகம் அதிகரிக்கும். உற்சாகமாக வாழ்வதற்கும் அழகிய முடியை பெறுவதற்கும் ஓட்ஸ் எளிதாக உதவுகின்றது.
ஓட்ஸ் சூப்
மதியம் அல்லது இரவு நேரத்திற்கு ஏற்றது.
தேவை:
ஓட்ஸ் ஒரு கைபிடியளவு
பால் ஒரு கப்,
பூண்டு நறுக்கியது- 3 பல் (விரும்பினால்)
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
வெண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
பூண்டைச் சேர்த்து லேசாக வதக்கி அதில் வெண்ணெய்யை உருக்கி அதில் ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்பு 2 கப் கொதிக்கும் நீர் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும். பின்பு பால், உப்பு, சேர்த்து 2 நிமிடம் வேக விட்டு மிளகு தூள் தூவி இறக்கவும் ஓட்ஸ் சூப் தயார்.