நுணா என்பது சிறு மர வகையாகும். இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு. இந்த தாவரவியலில் Morinda Tinctoria எனப்படுகிறது. இது மாவிலை போன்ற இலைகளைக் கொண்டது. இது இரு வகையாக உள்ளது ஒன்று மஞ்சள் நுணா மற்றது வெள்ளை நுணா. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் சிறிதாக இருக்கும். இதன் மரப்பட்டைகள் வெகுவாக வெடித்து காணப்படும். மரத்தை வெட்டிப் பார்த்தால் உட்புறம் மஞ்சளாக இருக்கும். அதனால் தான் இதற்கு மஞ்சணத்தி என்ற பெயர் வந்துள்ளது.
இந்த சிறு மர வகை வருடத்திற்கு ஓரு முறை முடிச்சுக்கள் போன்ற காய்களை காய்க்கின்றது. இந்த காய்கள் பழுக்கும் பொழுது கறுப்பு நிறமாக மாறி விடுகின்றன. இந்த பழங்கள் ஒரு விதமான துர்நாற்றத்துடனும் பார்ப்பதற்கு சற்று விசித்திரமாகவும் இருக்கும்.
நுணா மரத்தின் பட்டைகள், இலைகள், காய்கள், பழங்கள் மற்றும் வேர்கள் மருத்துவக் குணம் படைத்தவை. இது தமிழகமெங்கும் காணப்படுகிற ஒரு மர வகை மூலிகையாகும். இது உஷ்ணத்தைத் தணிக்கக் கூடியது.
கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகளை நீக்கக் கூடியது. தோல் நோய்களை குணமாக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
இந்த மரத்திலிருந்து ஒரு மஞ்சள் நிற நிறமூட்டி தூளாக்கப்படுகிறது. இந்த நிறமூட்டி துணிகளுக்கு நிற மூட்ட பயன்படுகிறது.
மருத்துவம்
இதன் இலைச்சாற்றை வலியுள்ள இடங்களில் பூச வலி குறையும். குறிப்பாக இடுப்பு வலிக்கு மிகவும் உகந்தது. குழந்தைகளுக்குத் தோன்றும் மாந்தத்திற்கு இது சிறந்த மருந்தாகும்.
Family: Rubiaceae
Genus: Morinda Species: Tinctoria
வீட்டு வைத்தியம்
நுணா இலை கஷாயத்தை காலை மாலை என இரு வேளை குடித்து வர நுணா இலை சீரகம் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெய்யில் எள்ளைக் காய்ச்சி வைத்துக் கொண்டு உடலில் உள்ள கழலை மற்றும் மேகப்புள்ளிகள் மீது தடவி வர குணமாகும்.
நுணா இலையையும் சாப்பிட்டு உப்பையும் சேர்த்து அரைத்து தட்டி உலர வைத்து எடுத்து பொடியாக்கி பல்பொடி போல பல்துலக்கி வர பல் கூச்சம் மறையும். பல் அரணை வலுப்பெறும்.
நுணா வேரை கஷாயம் செய்து குடிக்க சுக பேதியாகும். மலக்கட்டு மற்றும் மலச்சிக்கல் எளிதாக கழியும். நுணா பல்வேறு சரும உபாதைகளுக்கு வயிற்று உபாதைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
நுணா பட்டையை நீரில் போட்டு ஊற விட்டால் மஞ்சள் நிறம் தண்ணீரில் இறங்கி விடும். பின் அந்த தண்ணீர் வெள்ளை நிற ஆடைகளை நனைத்து எடுத்து உலர வைக்க ஆடைகள் காவி நிறம் பெறும். அந்த ஆடைகளை அணிவதன் மூலம் உடலின் உள் உள்ள நோய்கள் குணமாகும்.
இந்த நுணாவை வைத்து ஒரு பிரபல நிறுவனம் தயாரிப்புகளை தயாரித்து உலக அளவில் விற்பனை செய்து வருகிறது. இவர்கள் வெள்ளை நுணாவிலிருந்து ஒரு வகை பானம் தயாரித்து பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.