5 லிட்டர் எண்ணெய் = ஒரு சிப்ஸ் பாக்கெட்

Spread the love

ஒரு காலத்தில் வாழைக்காய் சிப்ஸ் ஒன்றுதான் நொறுக்குத் தீனியாக சக்கை போடு போட்டது. அதற்கு பின் மரவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு என்று கிழங்கு வகைகள் சிப்ஸ் உணவாக & நொறுக்குத் தீனி உணவுகளாக அமைந்துவிட்டது. உருளைக் கிழங்கு சிப்ஸை அப்படியே சாப்பிடலாம். சமைக்கத் தேவையில்லை. இது வயிற்றுக்குச் செல்லக்கூடிய எடை குறைவான உணவாகும். ஒவ்வொரு சிப்ஸையும் கடித்து முடித்தவுடன் இன்னும் ஒரு துண்டு என்று சாப்பிட அடங்காத ஆசையைத் தூண்டும்.

பீர் குடிக்கும் நபர்களைக் கண்டால், கேட்டால் புரிந்து கொள்வீர்கள். அவர்கள் அருந்தும் பானத்திற்கு ஏற்ற டிஷ் (சைடு உணவு) இதுதான் என்று. அவ்வளவு விரும்பிச் சாப்பிடும் உருளைக் கிழங்கு சிப்ஸை சாப்பிடக் கூடாது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இது மட்டுமல்ல உருளைக் கிழங்கு சிப்ஸில் கலோரி தவிர வேறு எந்த சத்தும் அரிதாக காணப்படுகின்ற இந்த சிப்ஸை  நீண்ட காலமாக உட்கொள்ளும் போது உடலுக்குத் தீமை தரும் உணவாக, கெடுதலாக கருதப்படுகிறது. நீங்கள் ஒரு பாக்கெட் அளவு உருளைக் கிழங்கு சாப்பிடும் பொழுது 5 லிட்டர் சமையல் எண்ணெயை குடித்ததற்குச் சமமான விளைவைத் தருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

குடிப்பழக்கத்துக்கு ஆளானவன் மனநிலை எப்படி மது அருந்தாமல் இருக்க முடியாது என்று எண்ணுகிறதோ அது போல நிலையைத் தான் உருளைக்கிழங்கு சிப்சும் கொண்டு சென்று விடும் என்று தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

உப்பு, சர்க்கரை, கொழுப்பு

உணவுத் துறையில் உள்ள நிறுவனங்கள் நமக்கு எவ்வாறு தூண்டில் போடுகின்றன? என்ற ஆங்கில புத்தகத்தினை எழுதிய ஆசிய மைக்கேல் மோசஸ் கூறும் பொழுது, உருளைக் கிழங்கு சிப்ஸ் நீண்ட கால உணவுப் பழக்கத்திற்குக் கொண்டு செல்லும் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாக்கில் உள்ள சுவை உணவின் நரம்புகள் வழியாக (உருளைக் கிழங்கு சிப்ஸின் ருசியை உணரும்) உடலுக்குள் உருளைக் கிழங்கு சென்றுவிடும். ஆனால் இந்த ருசி உணவு மீண்டும் உருளைக் கிழங்கு சிப்ஸ் இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தூண்டும் ஆசையை, செய்தியை மூளைக்குத் தூண்டி விடுகிறது. மாதத்திற்கு இரு முறை மற்றும் குறைந்த அளவு சாப்பிடுவது தான் சிறந்தது என்றும் மேலும் அவர் கூறுகிறார். புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமையான விளைவுகள் போல உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதாலும் இருப்பதாக கூறுகிறார். அதனாலும் உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

உருளைக்கிழங்கு சிப்ஸில் அடங்கியுள்ள கொழுப்புப் பொருள் மட்டும் காரணமல்லாது, உடலில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய அக்லாமைடு என்ற இரசாயனப் பொருள் இதில் அடங்கியுள்ளது. இதன் காரணமாக, சந்தையில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலேயே, அதிக நச்சுப் பொருள் சேர்ந்துள்ளது. உருளைக் கிழங்கு சிப்ஸ் தான் என்று அறியப்படுகிறது.

உருளைக் கிழங்கு சிப்ஸில் அக்லாமைடு எவ்வளவு அடங்கியுள்ளது?

உருளைக் கிழங்கு போன்ற அதிக அளவுள்ள கார்போஹைடிரேட் உணவுப் பொருட்களை அதிக வெப்பநிலையில் (100 சென்டிகிரேடுக்கு மேல் எந்த ஒரு உணவுப் பொருளையும்) சமைக்கும் பொழுது அக்லாமைடு அதிகம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. சாதாரணமாக அது வறுக்கப்பட்டாலும், எண்ணெய் விட்டு பொறிக்கப்பட்டாலும் அதிக கார்போஹைடிரேட் உள்ள மற்ற எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அதனை சமைக்கப்படும் பொழுது ஓரளவு நச்சுப்பொருள் உருவாகிறது. ஆனால் ஜங்க் புட் என்று கூறப்படும் நொறுக்குத் தீனி வகை உணவுகளில் தயாரிக்கப்படுவது போல அக்லாமைடின் அளவு அதிக அளவு இல்லை. சுற்றுபுறச் சூழல் சட்ட அமைப்பு மூலம் உருளைக் கிழங்கு ஒரு சிப்ஸில் எந்த அளவுக்கு அக்லாமைடு அளவு உள்ளது என்று பரிசோதனை செய்ததில் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 39 மடங்கு அதிகமாக உள்ளது. ஒரு சில கம்பெனி தயாரிப்புகளில் இது 910 மடங்கு அதிகம் உள்ளது என்பது அதிர்ச்சிகரமான ஒன்றாக உள்ளது.

அதிக வெப்ப நிலையில் வைத்து சமைக்கப்படும் பொழுது, அக்லாமைடு என்ற விஷப் பொருள் தவிர வேறு சில இரசாயனப் பொருட்கள் உருவாகின்றன என்று தெரிய வந்துள்ளது. இதில் 800 பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 52 பொருட்கள் புற்று நோயை தோற்றுவிக்கக் காரணிகளாக உள்ளன. இதன் மூலம் நாம் அதிக வெப்பநிலையில் சமைக்கும் உணவுகளினால் ஏற்படும் சிக்கல்களை அறிந்து கொள்வதுடன், ஜங்க் புட் நொறுக்குத் தீனி உணவுகளை தவிர்ப்பது நமது உடல் நலத்திற்கு நல்லது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.


Spread the love