அசைவ உணவு ஆபத்தா?

Spread the love

அசைவ உணவு பிரியர்களை விட அசைவ பிரியர்களே அதிகம். அசைவ பிரியர்களுக்கு, அசைவ உணவுகளின் பெயரை சொன்னாலே நாவில் எச்சில் ஊறும். ஆஹா…

அசைவ உணவை வாயில் வைப்பதற்கு முன்பே என்ன சுவை என்று கூற தொடங்கி விடுவார்கள். அதன் வாசனை, சமைக்கும் போதே நம்மை சாப்பிட அழைப்பது போல் இருக்கும். இதை படிக்கும் போதே நம்மில் பலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்திருக்கும்.

அசைவ பிரியர்களுக்கு, தினமும் ஓர் அசைவ வகை உணவு கண்டிப்பாக வேண்டும். சிலருக்கு உணவில் அசைவம் இல்லை என்றால் உணவே தொண்டையினுள் இறங்காது. நிமிடத்திற்கு நிமிடம் மாறும் இந்த உலகில் அசைவ உணவை தவிர்ப்பதே நல்லது. அசைவ உணவை அதிகமாக சாப்பிடுவதால் அதிக தீமைகள் தான் ஏற்படுகிறது.

அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் அதிகமாக சாப்பிடும் போது செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், சீரற்ற இதய துடிப்பு, அதிக உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதிக இரத்த அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிகமாக பிராயிலர் சிக்கன் சாப்பிடுவதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பெண் குழந்தைகள் இதை அதிகமாக சாப்பிட்டால் சிறு வயதிலேயே பருவம் எய்தும் நிலை உண்டாகும்.

உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்கும் போது விரைவில் செரித்து விடும். அசைவ உணவு செரிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே அதிக அளவில் அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. முக்கியமாக, அசைவ உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவித்து விடலாம். செரிமானம் சரியாக நடைப் பெறவில்லை என்றால் பித்தப்பையில் கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக ஆண்கள் மது அருந்தும் போது அசைவ உணவுகளை சாப்பிடுவார்கள். இதனால் உடலில் கொழுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த கொழுப்புகள் குடலில் தங்கி குடலினை பாதிக்கிறது. இதன் விளைவுகள் தான், அதிக கோபம், எரிச்சல், நிதானமின்மை இவை அனைத்தும்.

அசைவத்தை நிறுத்துவதால்

இறைச்சியை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் நிறுத்தும் போது, உடல் எடை நான்கு கிலோ வரை குறைய வாய்ப்பு உள்ளது. இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் உடல் சூட்டை குறைக்கலாம்.  ஆட்டு இறைச்சி, சாப்பிடுவதை குறைத்து கொள்வதன் மூலம் உடலில் சேரும் கொழுப்பை குறைக்க முடியும். கடினமான வேலை செய்பவர்கள் எந்த உணவை சாப்பிட்டாலும்  விரைவில் செரித்துவிடும். இதுபோன்றவர்கள், அசைவ உணவுகளை சாப்பிட்டாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆரோக்கியமான வாழ்வு வாழ அசைவத்தை குறைத்து கொள்வோம்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love