குழந்தைகளுக்கு ஏற்ற அசைவ உணவுகள்…

Spread the love

குழந்தைகளுக்கு அசைவ உணவை சாப்பிட கொடுக்கலாம், என்று  கூறியவுடன் பெற்றோர்கள் கேட்கும் முதல் கேள்வி அசைவத்தில் எதை சாப்பிட கொடுப்பது.

மீன், சிக்கன், மட்டன் இந்த மூன்றிலுமே நிறைய புரதங்கள், தாதுக்கள் வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. அதிலும், வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஹீமோகுளோபின், போஷாக்கு, முழுமையான புரதம் என்ற  9 முக்கியமான அமினோ அமிலங்கள் சிக்கன், மீன், மட்டன் மூன்றிலும் இருக்கிறது.அப்படியென்றால் குழைந்தைக்கு சாப்பிட எதை கொடுக்கலாம் என்ற சந்தேகம் வந்திருக்கும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

மீன்

மீன், வளர்கிற குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு என்றே சொல்லலாம். மீனில் அதிகமான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் இருக்கிறது. முக்கியமாக மீனில், ஒமேகா 3, ஞிபிகி ஆகியவை இருக்கிறது.

ஒமேகா 3 இதயத்திற்கு மிகவும் நல்லது, கொலஸ்டிராலை  கட்டுர்படுத்த உதவுகிறது. ஞிபிகி குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மீனில் இருக்கின்ற ஒமேகா 3, ஞிபிகி, வைட்டமின் கி குழந்தைகளின் மூளை வளர்சிக்கும், கண்ணிற்கும் மிகவும் நல்லது. குழந்தைகளின் கவனிக்கும் திறனும் அதிகரிக்கும், நல்ல நடத்தை மற்றும் நன்றாக படிப்பதற்கும் மீன் மிகவும் நல்லது.

மன உளைச்சலை குறைப்பதற்கும் மீன் மிகவும் நல்லது.

எலும்பு வலுபெறவும், மூட்டுகளில் வலுப்பெறவும்,

புற்றுநோயில் இருந்து  பாதுகாக்கவும் மீன் உதவுகிறது. வாரத்துக்கு 3 முறை மீன் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய், தொண்டை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் இது எல்லாம் வராமல் நம்மை பாதுகாக்கிறது. பண்ணலாம் அப்படின்னு டாக்டர்ஸ் சொல்றாங்க.

சிக்கன், இதில் அதிகப்படியான புரதங்கள் இருக்கிறது. குழந்தைகள் வலுவாக மற்றும்  உயரமாக வளருவதற்கும் தேவையான அமினோ அமிலங்கள் இதில் இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு கொஞ்சம் சிக்கன் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். இதனால் தான் சிக்கன் சாப்பிட பிறகு குழந்தைகள் நொறுக்கு பண்டங்களை சாப்பிடமாட்டார்கள்.

மட்டன் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், மட்டனில் அதிகபடியான நிறைவுற்ற கொழுப்பு இருக்கிறது. இப்பொழுது இல்லை என்றாலும் பிற்காலத்தில் உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அசைவ உணவுகளில் நம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப அசைவ உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்கலாம்.


Spread the love