மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள்

Spread the love

ஒரு தடவை சமையல் செய்ததை அப்படியே வைத்திருந்தால், கெட்டுப்போய்விடும். இதனைத் தடுக்க, சமையல் செய்த உணவினை முதலில் பிரிட்ஜில் வைப்பதும், பின்னர் அதை சூடு செய்து உண்பதும் தற்போதுள்ள பெரும்பாலானவர்களின் நடைமுறை. ஏற்கனவே, சமைத்த உணவு, ஆறிப்போயிருந்தால் அதை சூடுபடுத்தி உண்பதால், நன்மைகளை விட தீமைகளே அதிகம். இதை மருத்துவர்களும், உணவியல் வல்லுனர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதை கடைபிடிப்பத்தில்லை. மீண்டும் சூடுபடுத்தி உண்ணக்கூடாத உணவுகள் குறித்து, அவ்வாறு சூடுபடுத்தி உணவுகளை உண்ணும் போதும் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா.2

கீரை வகைகள்

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரை வகைகள். எந்த உடல் நலக்குறைவு வந்தாலும் சரி, மருத்துவர்களும், கிராமப்புறத்தில் பாரம்பரிய வைத்தியர்களும் முதலில் சொல்லும் அட்வைஸ் நீங்க  சாப்பாட்டில், கீரையை அதிகம் சேர்த்துக்குங்க என்பதுதான். இந்த கீரைகளில் அதிகளவு இரும்புசத்து மற்றும் நைட்ரைடு உள்ளது. இந்த நைட்ரைடுசூடுபடுத்தும்போது, நைட்ரைடாக மாறும். இது புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது.எனவே, நீங்கள் கீரையை ஏற்கனவே சமைத்துண்ணும் போது, அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இவ்வாறு, கீரையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை, மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், உங்களுக்கு செரிமானப்பிரச்னைகள் வரும் ஆபத்துள்ளது. அதனால் தான், இரவு நேரத்தில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள்.

முட்டை

முட்டை மற்றும் காளான் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்களே அரிது என்று தான், சொல்ல வேண்டும்.இந்த முட்டை மற்றும் காளான் போன்ற உணவுககளில், அதிகளவில் புரோட்டீன் நிறைந்திருக்கின்றன.இவற்றை சமைத்து உண்டபிறகு, ஆறிய நிலையில், மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உங்களது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த முட்டை மற்றும் காளான் போன்றவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால், அவை விஷத்தன்மை வாய்ந்ததாக மாறி விடும் அபாய நிலை உள்ளது.

இது செரிமானப்பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழி வகுக்கும். கோழி இறைச்சியில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. சிக்கனை சூடாக்கும்போது புரோட்டீனானது இரு மடங்காக அதிகரித்து, ஜீரணத்தன்மை குறைந்து விடும் ஆகவே, முட்டை மற்றும் கோழி இறைச்சியை சூடுபடுத்தி உண்ணக்கூடாது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து பிரிட்ஜில் வைத்து விட்டு, மீண்டும் அதை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இவ்வாறு செய்தால், உருளைக்கிழங்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுடைனவாகி மாறும் அபாயம் உள்ளது. இதனால், வாந்தி குமட்டல், மற்றும் உடல்நலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

சமையல் எண்ணெய்

எந்த வகையிலும் சமையல் எண்ணெயை திரும்ப திரும்ப சூடுபடுத்தி சமையல் செய்யக்கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.இவ்வாறு செய்வதால் புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவை தோன்றுவதற்கு காரணமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

பீட்ரூட்

பீட்ருட்டும் கீரை வகைகளைப் போலவே, நிறை நைட்ரைட்ஸ்களை உள்ளடக்கியது. அதனால், பீட்ரூட்டை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

பழைய சாதம் பழைய சாதத்தில் வைட்டமின் பி அதிகளவில் உள்ளது. நீங்கள் பழைய சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது, அதன் நச்சுத்தன்மை அதிகரித்து விடும். பழைய சாதத்தை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது


Spread the love