கணவன் மனைவிக்கிடையே இருக்க வேண்டியவை இது மட்டுமா?

Spread the love

காதல் திருமணமாக இருந்தாலும், ஒப்பந்த திருமணமாக இருந்தாலும் கடைசிவரை நிம்மதியாக வாழ அன்பு மட்டுமே ஒரு சிறந்த அஸ்திவாரமாக இருக்க வேண்டும்.திருமணம் ஆனவர்கள், ஆகபோகிறவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது இந்த ஒன்று தான்கணவனோ, மனைவியோ ஏதோ ஒரு விவாதத்தினை எடுத்து வைக்கும் போதோ, இல்லை ஒரு விஷயத்தை கூறவேண்டும்என்று வரும் போது அதை பொறுமையாக கேட்கும் பக்குவம் இரண்டு நபரிடமும் இருக்கவேண்டும்.


நான் கூறுவதை முதலில் கேள் என்று ஒரு ஆண் தன் மனைவியிடம் கூறிக்கொண்டுபோகும்போது அந்த இடத்தில் ஒரு ஆணாதீக்கம் தான் வெளிப்படும். நமது அருகிலேயேஇருக்கும் ஒருவரால் மட்டுமே நம்மை அதிகமாக புரிந்துகொள்ள முடியும். நாம் எடுக்கும்அதிகமான முடிவுகள், செயல், விருப்பம் எல்லாம், அனைத்து நேரங்களிலும் சரியாகஇருப்பதில்லை. அந்த நேரத்தில் நம்முடைய உறவு, நம்மிடம் வந்து ஒரு விருப்பத்தைசொல்லும் போது, அது உண்மையிலேயே சரியாக இருந்தது என்றால், ஒரு சிறிய சிரிப்புடன்அந்த விருப்பத்தை ஏற்றுகொள்ளுங்கள் . உங்கள் துணைக்கு கொடுக்கும் முதல் மதிப்பு இதுதான்.


வாரத்தில் ஒருமணி நேரம் உங்கள் துணையோடு நேரத்தை செலவழியுங்கள். மற்றநேரங்களில் நீங்கள் பேசுவதை விட, வெளி உலகத்தை மறந்து உங்களுக்கென்று ஒரு நேரத்தைசெலவழித்து, அந்த நேரத்தில் அதிகமாக பேசுங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை மட்டும்பேசுங்கள். உங்களுக்கென்று ஒரு உலகம் உருவாகும். ஆனால் இந்த நேரத்தில் தொலைபேசியைஅனைத்து வைத்துவிடுங்கள். முடிந்த அளவிற்கு நேர்மையாக இருங்கள். ஏனென்றால்? செய்தஒரு விஷயத்தை கோபமாக கூறும்போது வரும் தாக்கத்தை விட அதுவாக தெரிய வரும்போது,நம்மளால் ஒன்றும் செய்ய முடியாது.


சிறிய சிறிய விஷயங்களாக இருந்தாலும், உதாரணமாக உங்களின் இலட்சியம்,நீங்கள் பயப்படும் ஒரு விஷயம், பின் சொல்ல வேண்டும் என்று தோன்றும் மறைவான காரியங்கள்இவையனைத்தும் உங்கள் மேல் நம்பிக்கையோடு சேர்ந்த பாசத்தை உருவாக்க கூடியதாகும். எவ்விதவாக்குவாதங்களாக இருந்தாலும் அதில் நான் தான் ஜெயிக்கவேண்டும் என்ற மனநிலை வரவேகூடாது. வாக்குவாதம் அதிகரிக்கும் போது உங்கள் மீது தவறு இல்லையென்றாலும் ஒற்றுமைஎன்னும் ஆயுதத்தை எடுத்து விடுங்கள். இப்படி விட்டு கொடுப்பதினால் பின்னால்ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.


எப்பொழுதும் நீ என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. ஏனென்றால்? நீஎன்று சொல்லகூடிய வார்த்தை பழிவாங்குதல் மாதிரி இருக்குமாம். அதாவது உன்னால் தான்நேரம் ஆகிவிட்டது, உன்னால் தான் எனக்கு இந்த மாதிரி நடந்தது போன்ற வார்த்தைகளைமுடிந்த வரை குறைத்துகொள்ளலாம். ஏனென்றால்? நாம் அப்படி கூறிதான், அவர்கள் தவறுசெய்திருக்கிறார்கள் என தெரியபோவது இல்லை.                           

https://www.youtube.com/watch?v=pc7ZVpoIdR0&feature=player_embedded


Spread the love
error: Content is protected !!