புதுமண தம்பதிகளுக்கு…

Spread the love

புதுமண தம்பதியா நீங்க? அப்ப இது உங்களுக்குத் தான்!

குழந்தை கட்டுப்பாடு காலம் போய், ஒரு குழந்தைக்காக ஏங்குகிற காலம் தான் இந்த காலம். இன்றும், குழந்தைப்பேறின்மை மருத்துவரை பார்க்க, ஒரு நாளைக்கு ஏகப்பட்ட பேர் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். புதிதாக கல்யாணம் ஆனவங்க பல பேரை, பயமுறுத்தி வருகிற முதல் பிரச்சனையா இந்த குழந்தைபேறின்மை இருக்கு. மருத்துவ ரீதியாக இந்த பிரச்சனைக்கு சொல்லப்படுகின்ற அடிப்படை காரணமே, குடி பழக்கம், சிகரெட், பல வருட சுய இன்பம், அப்புறம் மாறி வரும் உணவு பழக்கம். இந்த கெட்ட பழக்கம் மட்டுமில்லாம, கணவன், மனைவியோட உடல் சூடும் பிரதான காரணமாக இருக்கின்றது.   உடல் சூடு அதிகமாக இருக்கின்ற தம்பதிகளுக்கு, பாலியல் உணர்வு அதிகமாக இருக்கும், ஆனால் பாலியல் செயல்பாடு அதிகம் இருக்காது. உடலின் மற்ற பாகங்களை விட, பாலியல் உறுப்புகளை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

ஆண்களுக்கு உடல் சூடு அதிகரித்தால், விந்துப்பை அதிகமாக விரிவடையும், அதனால் விதைப்பை தொங்குகின்ற நிலையும் ஏற்படுகின்றது. இதனால செக்ஸ் ஆர்வம் அதிகரித்தாலும், உடலுறவில், அதிக நேரம் செயல்பட முடியாது. சுய இன்ப பழக்கம் உள்ள ஆண்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, குற்ற உணர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து, உடலுறவில் நாட்டமே இல்லாம போகவும் வாய்ப்பு இருக்கு. உடலுறவுக்கான தகுதியும் நாளுக்கு நாள் குறைந்திடும்.

பெண்களுக்கும் சில பாதிப்புகள் இந்த உடல் சூட்டால ஏற்படுகின்றது. பெண்களுக்கு உடல் சூடு அதிகமானால்? உடலுறவில் ஆர்வம் குறைந்து, வெள்ளைப்படுதல், உடல் தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகு வலி, பிறப்புறுப்பில் எரிச்சல், கோபம் போன்ற பிரச்சனைகள் இருக்கும். சில பேருக்கு வாயு தொல்லையாலும் கூட உடல் சூடு ஏற்படும். வாயு தொல்லைக்கு காரணம், அஜீரணம். அதனால, பெண்கள் ஜீரண கோளாறை சரி செய்து, குழந்தை பேருக்கு தங்களோட உடலை தயார் செய்யலாம்.

மனிதனுக்கு புகை பழக்கம் தேவையில்லாத ஒன்னு. ஆனால் இப்பொழுது இருக்கும் பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் புகை பழக்கம் பேஷன் ஆகிவிட்டது. சிலருக்கு இந்த பழக்கத்தாலேயே, ஆயுளுக்கும் குழந்தை பிறக்காமல் போய்விடுகிறது. புகை பிடிப்பதால், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறையும். இதற்கு சிகரெட்ல இருக்கற ரசாயனம் தான் காரணம். இது தீவிரம் அடைந்து காலப்போக்கில், பிறப்புறுப்பில் இருக்கின்ற ரத்த நாளங்களுக்கு, உடலுறவின் போது கிடைக்கும் ரத்த ஓட்டம் தடை செய்யப்படுது. இதோட உச்ச கட்ட பின் விளைவாக, பெண்களுக்கு கருமுட்டைகளை மாதாமாதம் உற்பத்தி செய்கின்ற ஹார்மோன்கள், சரியா வேலை செய்ய முடிவதில்லை. இதனால், குடி பழக்கமும், புகை பழக்கமும் இருக்குற பெண்களால், தங்களோட சந்ததியை பெற முடியாது.

மன அழுத்தம் இல்லாம இருக்கறதும் ரொம்பவே முக்கியம். பெண்களுக்கு, கருமுட்டையை உற்பத்தி செய்ற ஹார்மோன்களுக்கு, இந்த அதிகமா தேவைப்படுவது துத்தநாகம் தான். இந்த சத்து குறைவாக இருக்கின்ற உணவுகளை சாப்பிடுகிறவங்களுக்கும், குழந்தையினமை பிரச்னை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சத்து குறைவாக இருப்பவர்கள், கடற் சிப்பி, மாமிசம், பயறு, மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட்டு வரலாம்.  இந்த சத்து குறைவாக இருக்கின்ற, திருமணம் ஆகயிருக்கும் பெண்களுக்கு, நிச்சயமாக மன அழுத்த பாதிப்பு இருக்கும். stress இருக்குற பெண்களுக்கு, மகப்பேறு கிடைப்பது அரிது. இதற்கு, யோகா, தியானம் போன்ற இயற்கையான வழிகளை கடைப்பிடிக்க, ஸ்ட்ரெஸ் போகும். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

முக்கியமாக நல்ல ஆரோக்கியமான பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும். அந்த நேரத்தில் இவர்கள் தங்களோட கருமுட்டை வெளியேறுகின்ற அந்த நாளை கவனித்து, தங்கள் கணவரோட சேர்ந்தால், சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதாவது தோராயமாக, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுகின்ற காலத்தில், 11 ஆம் நாளில் இருந்து, 21 வது நாள் வரை கருமுட்டை வெளியேற வாய்ப்புள்ளது. இந்த நாளில் உறவு கொள்கின்ற, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பிள்ளைப்பேறு நிச்சயம்.

 எம். திவாகரன் 


Spread the love