நரம்பு தளர்ச்சியடைதால் ஏற்படும் நடுக்கம் தான், உடல் நடுக்கம் என அறியப்படுகிறது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் மூளைதான். எப்போதெல்லாம் மூளையின் கட்டளைகள் நரம்பிற்க்கு செல்லுவதில் தடைபடுகின்றதோ, அதைதான் நரம்பு தளர்ச்சி என்று கூறுகின்றனர். இதன் அதிகபட்ச தாக்கத்தால் உடலுறவில் நாட்டம் குறைந்துவிடும்.
நாள்பட்ட சோர்வு, மனநிலை குறைவு, பயம், பதட்டம், அதிகபட்ச சிந்தனை இவ்வித பிரட்சனைகள் நரம்பு பலவீனத்தின் அறிகுறிகளாகும். இதை நீக்கும் வழிகள் நமது உணவில் அதிகபட்சம் இருக்கின்றது. சரிவிகித உணவுகளை சாப்பிட்டு வருவதால் இதன் குறைபாடுகளை தவிர்க்கலாம்.உணவில் சாதாரணமான எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.
பச்சை காய்கறிகள், பழங்கள், கீரை, வேர்கடலை, பொட்டுகடலை, திராட்சை, தக்காளி,திராட்சைபழம், ஆரஞ்சு பழம் மற்றும் முளைகட்டிய தானியம், இவையெல்லாம் முறையாக சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், ஆகியவற்றிலிருந்து விடுபடலாம். திராட்சை சாப்பிடுவதனால், உடல் வறட்சி, பித்தம் நீங்கி, இரத்தம் சுத்தமாகி, உடல் நடுக்கம் குணமாகும்.
அதோடு இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுபெற்று, மூளை செயல்பாடுகள், நரம்புகள், சீராக இயங்குவதற்கு ஒத்துழைக்கும். அதனால் எந்த விதமான திராட்சையினாலும் உடலிற்கு பாரபட்சம் இல்லாத நன்மைகள் மட்டுமே கிடைக்கும். இரத்த சோகையையும் தீர்க்க உதவுகிறது. கை, கால்,உடல் நடுக்கம் உள்ளவர்கள் தினமும் காலையில் இஞ்சி சாறோடு, தேன் கலந்து குடித்து வந்தால் சில நாட்களிலேயே உடல் நடுக்கம் நீங்கும்.
போதை பழக்கத்தை உடனே நிறுத்தும் போது கை, கால், நடுக்கம் ஏற்படலாம்.
ஆனால் இது தற்காலிகமான நடுக்கம் தான். சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். கடுக்காய் மற்றும் ஜாதிக்காய் நரம்புகளுக்கு பலத்தை கொடுத்து உடல் இயக்கத்தை சீராக்கி விடும். ஆனால் ஜாதிக்காயை அளவாக எடுக்க வேண்டும்.
இந்த சிகிச்சையோடு மனதை சாந்தப்படுத்துவது தான் அவசியம், அதிக கோபம், தேவையில்லாத சிந்தனை இதை தவிர்ப்பது நல்லது.