நெகடிவ் உணவுகள்

Spread the love

உணவில் என்ன நெகடிவ், பாசிடிவ் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நெகடிவ் உணவு என்றால் நெகடிவ் கலோரிகளை தரும் உணவுகள். அதாவது நீங்கள் ஒரு உணவுப்பொருளை மென்று, ஜீரணித்து, வளர்சிதை மாற்றத்தால் உட்கிரகித்து, மிகுந்த பகுதியை கழிவாக வெளியேற்ற செலவாகும் கலோரிகளை விட, நீங்கள் உண்ட அந்தப்பொருள் குறைவான கலோரிகளை உடையதாக இருந்தால் அது நெகடிவ் உணவு! உதாரணம் செலரி. இதில் உள்ளது நீரும், ஜீரணிக்க முடியாத செல்லூலோஸ், கலோரிகளற்ற விட்டமின்களும், தாதுப்பொருட்களும் தான். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை இந்தப்பட்டியலில் சேர்க்கலாம். அஸ்பாரகஸ், லெட்டூஸ், புரோக்கலி, முட்டைக்கோஸ், கேரட், காலிஃப்ளவர், ஆப்பிள் முதலியன நெகடிவ் உணவுகளாக சொல்லலாம்.

நெகடிவ் உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. ஆனால் வெறும் நெகடிவ் உணவுகளை உண்டு, எடையை குறைக்க முயற்சிப்பது ஆபத்தானது. ஒரு நாளைக்கு இதர உணவுகளுடன், அதிக அளவில் காய்கறிகளும், பழங்களையும் நிறைந்த பரிமாறல்கள் போதுமானது. பொதுவாக நெகடிவ் உணவுகள் உடலுக்கு நல்லவை. ஆனால் அவையே உணவாகாது.

கலோரி என்றால் என்ன?

கலோரி என்பது சக்தியை அளவிடும் அலகாகும். ஒரு கிராம் நீரை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்துவதற்கு தேவையான சக்திதான் கலோரி. அதிக எடை உள்ளவர்களுக்கு தேவையான கலோரிகள் – அவர்களது எடையின் ஒரு கிலோவுக்கு 20 கலோரி வீதம் தேவை. அதாவது உங்கள் எடை 80 கிலோ இருந்தால், தினசரி கலோரியின் தேவை – 80 x 20 = 1600 நார்மல் எடை உள்ளவர்கள், அவர்களின் எடையின், கிலோவுக்கு 30 கலோரி தேவை. குறைவான எடை உள்ளவர்களுக்கு அதிக கலோரிகள் தேவை. அவர்களது எடையின் ஒரு கிலோவுக்கு 40 கலோரிகள் தேவை. இந்த அளவுகள் வயதிற்கேட்ப மாறுபடும்.

சமச்சீர் உணவில் இருக்க வேண்டியவை

கார்போஹைடிரேட்                       

புரதம்                                    

கொழுப்பு 

முன்பு சொன்னது போல், நெகடிவ் கலோரி உணவுகளால் உடல் அதிகம் கலோரிகளை செலவிட நேருகிறது. இதனால் உடலின் கொழுப்பு கரையும் வாய்ப்புகள் அதிகம்.

உதாரணமாக ஒரு இனிப்பு 400 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். அதை ஜீரணிக்க 250 கலோரி செலவான பின் மீதி 150 கலோரி உடலில் கொழுப்பாக சேர்ந்து கொள்கிறது. ஆனால் ஒரு துண்டு செலரியை உட்கொண்டால் 5 கலோரி கிடைக்கும். அதை ஜீரணிக்க அதிக கலோரிகள் செலவாகும். இதனால் உடல் எடை குறையும்.

எல்லா உணவுகளிலும் கார்போஹைடிரேட் அல்லது புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், விட்டமின்கள் உள்ளன. நெகடிவ் கலோரி உணவுகளில் உள்ள விட்டமின்கள், தாதுப்பொருட்கள் சில என்ஜைம்களை உருவாக்குகின்றன. இவை இந்த உணவுகளை மட்டுமல்ல, உடலில் உள்ள கலோரிகளையும் சிதைத்து ஜீரணமாக உபயோகப்படுத்துகின்றன.

நெகடிவ் உணவுப் பட்டியல்

பீட்ரூட்

ப்ராக்கோலி

முட்டைக்கோஸ்

கேரட்

காலிஃப்ளவர்

காரமிளகாய்

வெள்ளரிக்காய்

பூண்டு

பீன்ஸ்

லெட்டூஸ்

வெங்காயம்

முள்ளங்கி

பசலைக்கீரை

டர்னிப்

அஸ்பாரகஸ்

செலரி

பழங்கள்

ஆப்பிள்

எலுமிச்சைபழம்

மாம்பழம்

ஆரஞ்சு

பப்பாளி

அன்னாசி

ஸ்டாபெர்ரி

தக்காளி

தர்பூசணி

உணவு நலம் நவம்பர் 2010

நெகடிவ், உணவுகள், செல்லூலோஸ், கலோரிகளற்ற விட்டமின்களும், தாதுப்பொருட்களும், நார்ச்சத்து, காய்கறிகள், பழங்கள், அஸ்பாரகஸ், லெட்டூஸ், புரோக்கலி, முட்டைக்கோஸ், கேரட், காலிஃப்ளவர், ஆப்பிள், நெகடிவ் உணவு, உடல் எடை, கலோரி, என்றால், என்ன, சக்தி, அதிக எடை, சமச்சீர், உணவில், இருக்க, வேண்டியவை, கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு, நெகடிவ் கலோரி, கொழுப்பு, செலரி, உடல் எடை குறையும், தாதுப்பொருட்கள், விட்டமின்கள், என்ஜைம், உடலில், நெகடிவ், உணவுப், பட்டியல், பீட்ரூட், ப்ராக்கோலி, காரமிளகாய், வெள்ளரிக்காய், பூண்டு, பீன்ஸ், லெட்டூஸ், வெங்காயம், முள்ளங்கி,

பசலைக்கீரை, டர்னிப், அஸ்பாரகஸ், பழங்கள், எலுமிச்சைபழம், மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி, அன்னாசி, ஸ்டாபெர்ரி, தக்காளி, தர்பூசணி,


Spread the love