நீர்க்கடுப்பு தீர…

Spread the love

கோடை காலத்தில் நீர்க்கடுப்பு ஏற்படுவது சகஜம். வெங்காயச் சாறு எடுத்து அதை நீராகாரத்தில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நீர்கடுப்பு பிரச்சனை தீரும். நறுக்கிய வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இளஞ்சூடாக இருக்கும் போது பருகினால் நீர்கடுப்பு குணமாகும். அதிக வலி இருந்தால் வெங்காயத்தை பச்சையாக மென்று தின்னலாம்.

உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று போக்கு பிரச்சனைக்கு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து அதனுடன் சோம்பு, உப்பு சேர்த்து பொடித்து மோரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெயில் காலங்களில் அதிக அளவு வியர்க்கும் என்பதால், குழந்தைகளுக்கு ஜலதோஷம் மூக்கடைப்பு, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை போக்க பூண்டை பாலில் அரைத்து கொதிக்க வைத்து நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அரை டீஸ்பூன் அளவு கொடுக்கலாம்.

கோடையில் வரும் மலச்சிக்கலுக்கு வெண்ணெய் சிறந்த மருந்து. அதை உருக்கி ஆறவைத்த பின் மேலே தெளிந்து நிற்கும் நெய்யை, இரு வேளை சாப்பிட்டால் குணமாகும்.


Spread the love