வேருக்கு நல்லது இந்த இலை!

Spread the love

பாரம்பரிய உலகில் வேப்பிலை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வேப்பிலை அழகிற்கும், ஆரோகியத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது. நமக்கு பொதுவாக இனிப்பு தான் பிடிக்கும், ஏனென்றால் இனிப்பு வாய்க்கு சுவையை தருகிறது. ஆனால், இனிப்பு உடலுக்கு நல்லது இல்லை என்று நமக்கு தெரியும். வேப்பிலை கசப்பாக இருந்தாலும் உடலுக்கு மிகவும் நல்லது.

வேப்பிலையின் நன்மைகள்

வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டால் நம் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள், வேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் மூலம் உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவை வேப்பிலை கட்டுபடுத்துகிறது.

பச்சை வேப்பிலையை சாப்பிட முடியாதவர்கள், முதலில் 2 டம்ளர் நீரை எடுத்து அதில் பத்து வேப்பிலை இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது நேரம் ஆற வைத்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தாலும், சர்க்கரை நோய் குணமாகும்.

சில குழந்தைகளுக்கு வயிற்று வலி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் வேப்பிலையை அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்களுக்கு வேப்பிலை ஒரு வரப்பிரசாதம். வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் வேப்பிலையை பானமாக குடிக்கலாம்.

பானம் செய்யும் முறை

தேவையான பொருட்கள்

வேப்பிலை – 10

தண்ணீர்   – 4 டம்ளர்

தேன்      -தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீரை ஊற்றி, அதில் 10 வேப்பிலை இலைகளை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு ஆறவைத்த பிறகு, வடிகட்டி அதில் தேவையான அளவு தேனை கலந்து குடிக்க வேண்டும்.

மலேரியா நோய் உள்ளவர்களுக்கு வேப்பிலை சிறந்த மருந்து. மலேரியாவில் இருந்து விடுபட தினமும் வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து, காலை மற்றும் மதியம் தொடர்ந்து குடித்து வந்தால் மலேரியா நோய் விரைவில் உங்களை விட்டு பறந்து போய் விடும். 

காலநிலை மாற்றத்தின் காரணமாக அனைவருக்கும் வரக்கூடிய நோய் தான் சளி. இதற்கு உடனடி நிவாரணம் வேப்பிலை தான். சளியில் இருந்து உடனடியாக விடுபட வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து சிறிது நேரம் ஆற வைத்து வெதுவெதுப்பான சூட்டில் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும்.

நோய் உள்ளவர்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. நோய் இல்லாதவர்களும் சாப்பிடலாம். வேப்பிலையை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது அல்லது வேப்பிலை நீரை குடிப்பதன் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கிறது.

உடலில் எங்கு அடிபட்டாலும் அதற்கு எளிய மருந்து வேப்பிலை நீர். வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து, சிறிது நேரம் ஆற வைத்து, அந்த நீரை கொண்டு காயம் உள்ள இடத்தை கழுவி வந்தால் காயம் ஆறி விடும்.

வேப்பிலை இலையின் மருத்துவ குணங்கள் 

நமது நாட்டில் பல மரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரங்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளன. அவற்றில் வேப்பமரத்தின் இலைகளில் உள்ள மருத்துவ குணங்களை காண்போம்…

· வேப்பிலை கொழுந்து மற்றும் வேப்பம் பூக்களை பச்சடி செய்து அல்லது ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும். இதை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.

· கோடை காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களுள் ஒன்று அம்மை நோயாகும். இந்த நேரத்தில் வேப்பிலையை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி ஊரவைத்து, பின்பு குளிக்கும் நீரில் மஞ்சள் மற்றும் வேப்பிலையை இட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அம்மை சரியாகும்.

· வேப்பிலை கொழுந்தினை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

· கோடை காலத்தில் வேர்க்குரு, அரிப்பு, படை போன்ற பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. வேப்பிலை மற்றும் அதன் பூக்கள் ஆகியவற்றை அரைத்து வாரத்திற்கு ஒருமுறை உடல் முழுவதும் பூசி இதமான நீரில் குளித்து வந்தால் தோல் சம்மந்தமான வியாதி எதுவும் வராது.

· வேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பல் வலி வராது. வேப்பிலையின் சாறு ஈறுகளில் படும் போது ஈறு சம்மந்தப்பட்ட எந்த நோயும் வராது. பற்களில் சொத்தை ஏற்படாது. வாய்துர்நாற்றம் பறந்து போய் விடும்.

வேப்பிலை முடி வேர்காலை வளரவைக்கும்

· அனைவருக்கும் முடி உதிர்வு என்பது இருக்கிறது. வேப்பிலை எண்ணையை தலை முடியில் மசாஜ் செய்து வந்தால், அது முடியின் வேர் பகுதியை தூண்டும். பின்பு, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் கூந்தால் அடர்த்தியாக வளரும்.

· உங்கள் தலையில் தாங்க முடியாத அரிப்பா! அதற்கு வேப்பிலை நீரை கொண்டு தலையை அலசுங்கள். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் அரிப்பு நின்று விடும்.

· உங்கள் முடி பொலிவிழந்து காணப்படுகிறதா! கவலை வேண்டாம். வேப்பிலை நீரை கொண்டு வாரத்திற்கு இரு முறை முடியை அலசி வந்தால் உங்கள் கூந்தலும் பளபளவென இருக்கும்.


Spread the love