அமேசான் மூலிகை எதற்கு? நம்ம ஊரு வேப்பம்பூ இருக்கே…?

Spread the love

பொதுவாக வேப்பம் மட்டும் தான் காக்கவும் பயன்படும், அழிக்கவும் பயன்படும். எந்த வளர்ச்சியை இந்த நாடு பார்த்தாலும், எந்த காரணத்திற்கும் நமது பகுதியில் இருக்கும் வேப்பமரத்தை மட்டும் அழிக்க விடாதீர்கள். வேப்ப மரத்தின் இலை, பூ, காய், வேர், பட்டை, பிசின் அனைத்திலும் சுத்தமான மருத்துவம் மட்டுமே இருக்கின்றது. குறிப்பாக வேப்பம் பூ பெரிய வரபிரசாதம் தான். 

சித்திரை மாதத்தில் இந்த பூவின் வருகை அதிகமாக இருக்கும். இது கபம், பித்தம், வயிற்று பூச்சி, நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு இவையெல்லாவற்றையும் தாண்டி உயிர் கொல்லியாக இருக்கும் புற்றுநோயை குனப்படுத்துவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றது. ஒரு கைப்பிடி வேப்பம் பூவை எடுத்து அதை காய வைத்து பொடியாக்கி சிறிதளவு தண்ணீரில் கலந்து குடித்து வர கபம், பித்தம், வாதம் ஆகியவை நீங்கிவிடும். 

மிளகு ரசம் வைக்கும்போது, அதில் கைப்பிடி வேப்பம் பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட பித்தமும், வயிற்று உப்புசமும் நீங்கும்..கல்லீரலை பாதுகாக்க வேப்பம் பூ முக்கிய பங்காக இருக்கின்றது. வேப்பம் பூவை பறித்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து நெல்லிக்காய் அளவில், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கண்ணிற்கு புலப்படாத குடல் புழு அழிந்து வெளியேறும். 


இந்த வேப்பம் பூவோடு முருங்கை பூவையும் அரைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு ஏற்படாமல், உடலிற்கு தேவையான பலத்தை பெறலாம். வேப்பம் பூவை கறிவேப்பிலையோடு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் பித்தம் காரணமாக ஏற்படும் வாந்தி, மயக்கம், போன்ற பிரட்சனைகள் தீரும். 
வேப்பம் பூ பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் பிரட்சனையால் உண்டாகும் வாய் கசப்பு நீங்கும்.

வேப்பம் பூவை தண்ணீரில் காய்த்து அதில் நெல்லிக்காய் சாற்றையும் தேனையும் கலந்து குடித்தால் சரும பிரட்சனைகளுக்கு முடிவு கட்டலாம். தொற்று கிருமிகளால் ஏற்படும் பிரட்சனையை தடுக்கும் ஆற்றல் வேப்பம் பூவில் இருக்கின்றது. இதை எப்படி சாப்பிட்டு வந்தாலும் நமக்கு நிச்சயமாக பயன் கிடைக்கும்.Spread the love