இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், உயிருக்கே ஆபத்தான சூழல் ஏற்படலாம். இதய அடைப்பு பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு, நாம் மருத்துவம் எடுத்தாக வேண்டும். இதய அடைப்பு பிரச்சனையிலிருந்து தப்பிக்க என்னென்ன சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
ஒன்பது மணியளவில் இதைச் சாப்பிடவும். பார்லி, பச்சைப்பயறு, சுக்கு, தனியா ஆகியவற்றை 5 கிராம் வீதம் எடுத்து 250 கிராம் புழுங்கலரிசியுடன் கலக்கவும். 8 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்த சாதத்தை வடிகட்டி, மிஞ்சி நிற்கும் கஞ்சியுடன் சிட்டிகை திப்பிலி, இந்துப்பு சேர்த்து சூடாகக் குடிக்கவும். பின்பு இரண்டு அரிசி எடை சிருங்க பஸ்மம், 30 மில்லி அர்ஜீனாரிஷ்டம் சாப்பிடவும்.
மத்தியானம் ஒரு மணிக்கு புழுங்கலரிசி சாதம், வெந்தயக் கீரை, பாகற்காய் சாம்பார், கோவக்காய் பொரியல், வேப்பம் பூ ரசம் போன்றவற்றை சாப்பிடவும். தயிரின் மேல் படிந்திருக்கும் ஆடையை நீக்கி, வெண்ணையை எடுத்து, கால் பங்கு தண்ணீர் விட்டு மோராக்கி, கசப்பு, துவர்ப்பு கலந்ததாக குடிக்கவும், சாப்பிடவும்.
மாலை ஐந்து மணிக்கு ஏலக்காய் போட்ட டீ குடிக்கவும். மாலை ஆறுமணிக்கு மூன்று ஸ்பூன் இந்துகாந்தம் கஷாயம், 12 ஸ்பூன் சூடான தண்ணீருடன் ஒரு வாயு குளிகையுடன் சாப்பிடவும்.
இரவு ஏழு மணி அளவில் 2 ஸ்பூன் ஹிங்கு வசாதி சூரணத்தை 1/2 டம்ளர் சுடுநீரில் அல்லது மோருடன் சேர்த்துக் குடிக்கவும். இரவு எட்டுமணி அளவில் கேப்பை அதாவது கேழ்வரகு தோசையை (புளித்த மோரில் கரைத்த மாவில்) சாப்பிடவும். இல்லாவிட்டால் கேழ்வரகுடன் அரிசி மாவு சேர்த்து மோர்க்களியாக சூடாகச் சாப்பிடவும். சுக்கா சப்பாத்தி சப்ஜியுடன் சாப்பிடவும்.
உணவு உண்டதும் வோத்ராசவம் 30 I.L. சாப்பிடவும். உடன் படுக்கக் கூடாது. 100 அடி நடந்தவுடன் தூங்கச் செல்லவும் இடதுபுறம் ஒருக்களித்துப் படுக்கவும்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும், மருந்துகளை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்.
இதையெல்லாம் தொடர்ந்து பழக்கப்படுத்தி வந்தால், இதய அடைப்பு பிரச்சனையிலிருந்து எளிதாக மீண்டு வரலாம்.