நீலி பிருங்காதி தைலம்

Spread the love

நீலி பிருங்காதி தைலம் பழமையான கூந்தல் வளம் தரும் அற்புத தைலம்.

தேவை A

நல்லெண்ணெய்                             2லி

அவரி இலை சாறு                        150 மி.லி.

நெல்லிக்காய் சாறு                       150 மி.லி.

முடக்கத்தான் சாறு                       150 மி.லி

கரிசாலை சாறு                               150 மி.லி

ஆட்டுப்பால்                                     150 மி.லி

பசும்பால்                                           150 மி.லி

எருமைப்பால்                                   150 மி.லி.

தேவை B

அதிமதுரம்                                        5கி

அஞ்சனக்கல்                                   5கி

குண்டுமணி                                      5கி

இரும்புப் பொடி                              5 கி

மாம் பருப்பு                                       8கி

தாணிக்காய் தோல்                       8கி

A –யில் உள்ளவற்றை இரும்புச் சட்டியிலிட்டு காய்ச்சவும். B-யில் உள்ளவற்றை மை போல் அரைத்து அந்த விழுதையும் இரும்புச்சட்டியில் இட்டு சுண்டக் காய்ச்சினால் நீர் சுண்டி தைலம் பிரியத் துவங்கும், நெருப்பைக் குறைத்து நன்கு காய்ச்சினால் தைலம் தனியாகவும் சக்கை தனியாகவும் பிரிந்து விடும்.

தைலத்தை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தினசரி தடவி வர தலை குளிர்ச்சியாகவும், முடி கருமையாகவும் நன்கு ஆரோக்கியமாக வளரும். அதிகம் தேய்த்தால் சளி பிடிக்கும். குளிப்பதற்கு முன்பும் தடவி குளிக்கலாம். தொடர்ந்து உபயோகித்து வர பொடுகு, தலைவலி, பித்தக் கொதிப்பு, செம்பட்டைத் தலைமுடி, தூக்கமின்மை போன்ற பற்பல பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

மசாஜ் செய்யும் முறை

மசாஜ் எண்ணெய் இளஞ்சூடாக இருக்க வேண்டும். கை விரல்களையும் உள்ளங்கைகளையும் பயன்படுத்தவும். தலையில் வட்டமாக, நிதானமாக முடியை பாகங்களாக பிரித்து, எண்ணெயை தடவி நீவிவிடவும்.

எண்ணெய் தலையில் 30-60 நிமிடம் ஊற வேண்டும்.

எண்ணெய் மசாஜ்ஜை வாரம் 2 முறை செய்யவும்.

மூலிகை செறிந்த ‘மஹா பிருங்கராஜ் எண்ணெய், நெல்லி எண்ணெய், ஆர்னிகா எண்ணெய்’ இவை மிகுந்த பலனை அளிக்கும்.

கூந்தல் பராமரிப்பில் மூலிகைகளின் பங்கு

அவுரி இலை                                    முடி வளரும்

மருதாணி இலை                            கருமை பெரும்

கற்றாழை                                          அரிப்பு புண் மறையும்

நெல்லி                                                                கருமை/குளிர்ச்சி

கடுக்காய்                                           உதிர்தல் குறையும்

முட்டை வெள்ளைக்கரு             புரத சத்து

ஆலிவ் எண்ணெய்                        வறட்சி நீங்கும்

சீயக்காய்                                           பிசுக்கை போக்கும்

துளசி                                                   கருமை தரும்

வல்லாரை                                          அரிப்பை நீக்கும்

பூவரசு                                                 புண் ஆற்றும்

முடக்கத்தான்                                  முடி வளரும்

கரிசலாங்கண்ணி                          மெருகு கூடும்.

தேங்காய் பால்                                                உதிர்வது மறையும்

எலுமிச்சம் பழம்                             வேர்க்கால் பலம் பெறும்

பூலாங்கிழங்கு                                 வலு தரும்

ஆடு தின்னாப் பாலை                                புழு வெட்டை குணமாக்கும்

மஞ்சிட்டா                                         உதிர்வது கட்டுப்படும்

கோரைக்கிழங்கு                            புதிய முடி வளரும்.

ஆயுர்வேத மூலிகை மருத்துவ முறையில் இவை தவிர எண்ணற்ற மூலிகைகள் கூந்தல் பராமரிப்பிற்காக உள்ளன. பாரம்பரிய முறையில் அவரவர்களுடைய அனுபவ முறையில் மூலிகைகளை காய்ச்சி தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தலைமுடியை பாதிக்கும் பொதுவான காரணங்கள் வயது, தட்ப வெப்ப நிலை , மாசுபடுதல், மாசுபட்ட தண்ணீர் போன்றவை. பலதரப்பட்ட வெளிநாட்டு அழகுச் சாதனங்கள் கிடைக்கும் இந்த நவயுகத்தில் கூட, இந்திய பெண்கள் குறிப்பாக தென்னிந்திய பெண்கள் இயற்கை எண்ணெய்களையே உபயோகிக்கின்றனர். வாராந்திர எண்ணெய் குளியல் செய்ய தவறுவதில்லை . எனவே, நம் நாட்டு பெண்களில் கூந்தல் அழகு சிறப்பாக உள்ளது.


Spread the love
error: Content is protected !!