எழில் தரும் எடை குறைப்பு

Spread the love

அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக உள்ளது, அதற்கு நாம் அழகு நிலையங்களை நோக்கி செல்வது மட்டுமல்லாமல் அதற்காக அதிக செலவும் செய்கிறோம். சிலர் அழகாக இருபார்கள் ஆனால், அவர்களின் அழகை கெடுப்பதே எடை தான்.

அதற்காக அவர்கள் பல விளம்பரங்களை பார்த்து பணத்தை பலவிதமாக செலவழிப்பது மட்டுமல்லாமல் உடலையும் வீணாக கெடுத்து கொள்வார்கள்.

இனி பணத்தையும், உடலையும் வீணாக்காமல் எளிமையான முறையில் உடலை குறைக்கலாம்.

எடையை குறைக்கும் உணவுகள்

· தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை, சிறிது உப்புடன் கலந்து, குடித்து வர உடல் எடை படிப்படியாக குறையும்.

· 5 பூண்டு பற்களை எடுத்து ஒரு டம்ளர் பாலில் இட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும். பின்பு, பாலுடன் பூண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  

· தூய்மையான பசும்பாலில் தேனை கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

· புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை படிப்படியாக குறையும்.

· தினமும் மோரில் கேரட்டை கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

· தினமும் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் துளசியை நன்கு அரைத்து கலந்து குடிக்க வேண்டும். இதை, தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறைய தொடங்கும்.

·           அனைவருக்கும் தெரிந்த ஒரு எளிய வழி வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

· உடல் எடை குறைவதற்கு ஒரு எளிய   உணவு தான், கொள்ளு. 2 டேபிள் டீஸ்பூன் எடுத்து ஒரு டம்பளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்து  மறுநாள் காலையில் தினமும் குடித்து வந்தால் உடல் எடை படிப்படியாக குறையும்.

· உடல் எடை குறைய கறிவேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் நான்கு மாதங்களுக்கு தொடர்ச்சியாக சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.


Spread the love