தேவையில்லா முடி

Spread the love

ஒருபக்கம் பல பெண்கள் நிறைய முடியுள்ள கூந்தல் இல்லையே என்று வருத்தப்பட, இன்னொரு பக்கம் சில பெண்மணிகள் தங்கள் முகத்திலும், கை, கால்களிலும், மார்பிலும் தேவையற்ற முடிகளால் அவதிப்படுகின்றனர். பெண்களுக்கு இருக்கக்கூடாத இடங்களில் முடி வளர்தல் மிகுந்த மன உளைச்சலை தரும். அருவருப்பாகவும் இருக்கும். ஆண்களுக்கு மீசை இருப்பதுபோல் பெண்களின் மேலுதடுகளில், தவிர கன்னங்கள், கை, கால்கள், மார்பில் (அரிதாக) இவற்றில் முடி அபரிமிதாக வளரும். இதை “ஹர்சூடிஸம்” (Hrisutism) என்பார்கள். இந்த அதீத முடி வளர்தல், மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. உலகில் 5 முதல் 10 சதவிகிதம் பெண்கள் முடிமிகைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

காரணங்கள்

* ஹார்மோன் கோளாறுகள் முக்கிய காரணமாகும். முடிவளர்ச்சி ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களால் (குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன்) நடத்தப்படுகிறது. பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சிறிதளவே இருக்கும். இது அதிகமானால் பெண்களுக்கும் ஆண்கள் போல முடி அதிகமாக வளரும். பிட்யூடரி, அட்ரீலின் சுரப்பிகளின் கோளாறுகளால் பெண்களில் டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகலாம்.

* சில மருந்துகளாலும் முடி மிகைப்பு ஏற்படும். இவை ஸ்டிராய்டுகள், முடி வளர பயனாகும் மினோக்ஷிடில் (Minoxidil), சைக்ளோஸ்போரின் (Cyclosparine).

* என்ஜைம் குறைபாடுகளும் முடிமிகைப்பு உண்டாக்கும்.

* கர்ப்பப்பை, “ஓவரிஸ்” இவற்றில் வரும் நார்கட்டிகள் (Cyst).

* ஒவ்வாமை, தொற்றுநோய்கள்.

சிகிச்சை

மருத்துவர்கள் ஹிர்சூடிஸைத்தை ஒரு நோயாகவே கருதுகின்றனர். அடிப்படை காரணங்களை கண்டுபிடிப்பது அவசியமாகிறது. அதிக ஹார்மோன் சுரப்பிருந்தாலும் மாதவிடாய் கோளாறுகளிருந்தாலும் தகுந்த மருந்துகளினால் குணப்படுத்தலாம். லேசர் சிகிச்சையால் முடி உறைகள் தீய்க்கப்பட்டு, முடி வளர்ச்சியை நிறுத்தலாம்.

ஹார்மோன்கள்செய்யும் பாதிப்புகள்

ஆணாகட்டும், பெண்ணாகட்டும், முடி வளர்ச்சியை கட்டுப்படுத்துவது ஹார்மோன்களே. அதுவும் முக்கியமாக ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான். இந்த ஹார்மோன் ஆண்களின் பருவ காலத்தில் அதிகம் சுரந்து, மீசை,  தாடியை உண்டாக்கும். இதே ஹார்மோன் பெண்களுக்கும் உண்டு – சிறிய அளவில், தேவையற்ற முடி, (மீசை, தாடி) பெண்களுக்கு தோன்றினால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டீரான் தேவைக்கு மீறி அதிகம் சுரக்கிறது என்று அர்த்தம். இந்த முடி வளர்ச்சி முகத்தில் மட்டுமின்றி, மார்பு, வயிறு, கை கால்களிலும் தோன்றும்.

சரி, பெண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் அதிகமானால் முடி வளர்கிறது. அதே போல் ஆண்களுக்கு வழுக்கை உண்டாகவும் இந்த ஹார்மோனே காரணமாகும்.

ஹிர்சூடிஸமும், கருப்பை திரவ கட்டிகளும் (Polycystic Ovarian Syndrome)

ஹிப்போகிராட்டிஸ் காலத்திலேயே, அதிக ஆன்ட்ரோஜன் ஹார்மோன் பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி தெரிந்திருந்தது. ஆன்ட்ரோஜன்ஹார்மோன்களின்அதிக உற்பத்தியால் முடிமிகைப்பு பெண்களுக்கு ஏற்படுகிறது.ஹிர்சூடிஸம் என்னும் அதீத முடிவளர்ச்சி (தேவையில்லாத இடங்களில்) உடலின் அதிக ஹார்மோன் சுரப்பதை எடுத்துக்காட்டுகிறது. பெண்களுக்கு ஹார்மோன் ஆதிக்கத்தில் உள்ள இடங்களில் கரடுமுரடான முடி உண்டாகும். 18லிருந்து 45 வயதுக்குள் உள்ள பெண்களில், 2லிருந்து 10 சதவிகிதம் பெண்களுக்கு ஹிர்சூடிஸம் ஏற்படுகிறது.

பெண்களுக்கு ஹார்மோன் ஆதிக்கத்தில் உள்ள இடங்களில் கரடுமுரடான முடி உண்டாகும். 18லிருந்து45 வயதுக்குள்உள்ள பெண்களில், 2லிருந்து10 சதவிகிதம்பெண்களுக்கு ஹிர்சூடிஸம் ஏற்படுகிறது.

பாலியல் உறுப்புகளில் முடி வளர முக்கிய காரணம் ஆன்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் ஒரு முக்கிய ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது முடிஉறை (Follicle) களில் டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோனாக மாறிவிடுகிறது.

சிகிச்சை முறைகளில் ஆன்ட்ரோஜன் உற்பத்தியை குறைக்கும் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல மருந்துகள் இருந்தாலும் லேசர் சிகிச்சையை பலர் விரும்புகின்றனர். நோயாளிகளில் 80 சதவிகிதம் உடனேயே பலன் கிடைக்கிறது. சிலருக்கு 2,3 தடவை செய்ய வேண்டிவரும். தேவைப்பட்டால் ஹார்மோனை குறைக்கும் மருந்துகளும், அதனுடன் லேசர் சிகிச்சையும் நல்ல பலனை தரும்.


Spread the love
error: Content is protected !!