சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இயற்கையான முறையில் ஸ்கிரப் பயன்படுத்துவது பற்றி தெரியுமா..வாங்க தெரிஞ்சுக்கலாம்.
1.தாமரை, அல்லி மற்றும் நாகப்பூ இவற்றை நிழலில் காய வைத்து, பொடி செய்து கொள்ளவும். இந்த கலவையுடன் தேனையும், நெய்யும் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் தேய்த்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் வைத்து இருந்தால் சருமம் மிளிரும்.
2.சிவப்பு சந்தன மரம், மஞ்சிட்டி , லோத்ரா மரப்பட்டை ,கோஷ்டம் , ஆலமரப்பட்டை, இவற்றை எல்லாம் தண்ணீரில் கலந்து களிம்பாக செய்து கொண்டு உபயோகிக்கவும். இதுவும், சருமத்தை மிளிர வைக்கும்.
3.கடலை மாவு 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி 1 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவிக் கொள்ளவும். இரவில் படுக்கும் முன் கழுவி விடவும்.