குடல்புண் என்ற அல்சர் நோய் வந்து விட்டால் மனிதனுக்கு பைத்தியமே பிடித்து விடும். கொஞ்சம் காரம் சாப்பிட்டு விட்டால் உயிரே போய் விடும். அறுவைச் சிகிச்சையை தள்ளிப் போட வேண்டிய சூழல் உள்ள அல்சர் நோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்கள், எவ்வித மருந்து, மாத்திரை, ஆப்ரேஷன் இன்றி குடல் புண்ணை இயற்கை உணவுகள் சாப்பிட்டே குணப்படுத்த இயலும்.
சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை என்பதால் தான் அல்சர் வருகிறது என்று கூறுபவர்களுக்கு, இயற்கை நல மையங்களில் ஒரு நாளைக்கு, இரண்டு வேலை உணவு தராமல், பட்டினி போட்டு அல்சரை குணப்படுத்துவது எப்படி என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மனிதனின் குடலில் உற்பத்தியாகும் அமிலங்கள் மனித உடலுக்கு எவ்வித கெடுதலும் தராது. குடலை அரிக்காது என்றே கூறலாம்.
மனிதன் சாப்பிடும் உணவை செரிமானம் செய்து, இரத்தமாக மாற்றுவதற்குத் தான் அமிலங்கள் சுரக்கின்றன. அல்சர் நோயாளிகள் அடிக்கடி உணவு சாப்பிடலாம் என்பதோ, அமில முறிவு மாத்திரை/ டானிக் சாப்பிடுவது என்பதோ தவறானதே! மனிதன் தான் சாப்பிடுகின்ற புளிக்கக் கூடிய மாவுப் பொருட்கள் உள்ள உணவுப் பொருட்கள், உப்பு, காரம் தான் குடலை அரிக்கின்றதே தவிர இந்த அமிலங்கள் அல்ல.
காரத் தன்மையுள்ள உணவுகளை மிகக் குறைவாகச் சாப்பிட்டு, அமிலத் தன்மையுள்ள உணவை அதிகமாகச் சாப்பிட்டதனால் தான் இந்த அல்சர் நோய் ஏற்படுகிறது. இதனை மறந்து விட்டு, மறுத்து விட்டு நேரம் தவறாமல் இட்லி, தோசை, பூரி, வடை போன்ற அமிலத் தன்மை உள்ள உணவுகளைச் சாப்பிடுவதாலும், அடிக்கடி பால், தயிர், மோர் போன்ற அமில வகை பானங்களை அருந்துவதாலும் அல்சர் நோயானது அதிகரித்துக் கொண்டு தான் செல்லும்.
அல்சர் நோயாளிக்கு ஏற்ற இயற்கை உணவுகள்
சாமல் பூசணிக்காய் ஒன்றை வெட்டி (பட்டை விதைகளுடன்) மிக்ஸியில் போட்டு சட்னி போல அரைத்துக் கொண்டு, அதனை மெல்லிய பருத்தித் துணியில் இட்டு வடிகட்டி ஒரு டம்ளர் சாறு எடுத்துக் கொள்ளவும். மேற்கூறிய சாறை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் வைத்துக் குடித்து வாருங்கள். நீங்கள் ஆங்கில மருந்துக் கடையில் வாங்கி முழுங்கும் அமிலமுறிவு அண்டாசிட் மாத்திரையில் இருக்கும் காரத் தன்மையை விட மேற்கூறிய சாறில் அதிக அளவு காரத் தன்மை இருக்கிறது.
மேலும், இந்தப் பூசணிக் காய்ச் சாற்றை வயிற்றில் உற்பத்தியான அமிலங்கள் சீரணிக்க உதவி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. இந்த பூசணிக்காய்ச் சாறு, அமில முறிவு மருந்தாகவும், உடலுக்கு அவசியமான காரத்தன்மையுள்ள உணவாகவும், ஒரே சமயத்தில் இரண்டு பயன்களை நமக்குத் தருகிறது. ஒரு டம்ளர் பூசணிச் சாறு தரும் நன்மை அமில முறிவு மாத்திரைகளை விட பல மடங்கு நன்மை தருகிறது என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஒரே மாதத்தில் அல்சரைக் குணப்படுத்தி விடலாம்
கொத்தமல்லி, புதினா. துளசி, மணத் தக்காளிக் கீரை, அரசமர இலை, வெற்றிலை போன்ற இலைகளைக் கைப்பிடி அளவுக்கும் குறைவாக மென்று சாப்பிட்டுச் சாறு குடித்து சக்கையைத் துப்பினாலும், பூசணிக்காய்ச் சாறு குடிக்கும் பொழுது கிடைத்த பலன் கிடைக்கும்.
அல்சர் நோயாளிகளுக்கு இளநீர், வாழைப்பழம் மிகவும் நல்ல உணவாகும். காலை 8 மணிக்கு பூசணிச் சாறு. 11 மணிக்கு வாழைப்பழம், தேங்காய். மாலை 3 மணிக்கு கைப்பிடி இலை. மாலை 6 மணிக்குத் தேங்காய், வாழைப்பழம். இதற்கிடையில் பசித்தால் தண்ணீர் அருந்திக் கொண்டு வந்தால் எந்த விதமான அல்சர் நோயாளியும் குணமாகி விடலாம். மணத்தக்காளி இலைகளை பேரீச்சம் பழத்துடன் சேர்த்து 10 இலைகள் வரை காலை, மாலை சாப்பிட்டு வரவும்.
மணத்தக்காளிக்கு புண்களை ஆற்றுவதில் ஒரு பெரிய சக்தியே உண்டு என்று கூறலாம். ஆகையினால் அல்சர் நோயாளிகள் மணத்தக்காளி இலைகளை மென்று சாப்பிட வேண்டும். சமையல் உணவை நிறுத்த முடியாதவர்கள் சமைத்த காய்கறிகளையும், கீரைகளையும், குறைந்த அளவு அரிசி சாதம் அல்லது ஒரு சப்பாத்தியுடன் சாப்பிடலாம். இனிப்பான பழங்கள் எதையும் சாப்பிடலாம்.