இயற்கை உணவு முறை

Spread the love

ராஜசீக உணவு

ராஜசீக உணவு என்பது மாமிச உணவுகளை குறிக்கும். இந்த வகை உணவுகள் மனிதனுக்கு ஒருபோதும் நன்மை அளிப்பவையல்ல. அதனோடு அசைவ உணவுகள் எடுக்கும்போது சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு மனநிலையும் மாறுபடுகிறது. அதனால் மன அழுத்தம் அதிகரித்து அதிக கோபம் வருகிறது.

பகுத்தறிவு குறைந்து சிந்திக்கும் ஆற்றல் சிதைந்துவிடுகிறது, என்று விஞ்ஞானிகள் சில ஆய்வு மேற்கொண்டு தெளிவுபடுத்தியுள்ளனர். அதனால் மனிதன் தன் வாழ்க்கையின் உண்மை நிலையை அறிய மறுக்கிறான். அதனாலேயே தவறுகள் செய்துத் துன்புறுகிறான்.

இதனை வள்ளுவப் பெருந்தகை ‘புலால் மறுத்தல்’ என்னும் அதிகாரத்தில் அற்புதமாகக் கூறியிருக்கிறார்.

‘செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்’.

குற்றங்கள் செய்வதிலிருந்து நீங்கி அறிவை உடையவர் ஓர் உயிரினடமிருந்து பிரிந்து வந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார் என்று விளக்கியுள்ளார். அசைவ உணவில் புரதம் கொழுப்பு போன்ற சத்துகள் இருக்கின்றன. இருப்பினும், அதில் மனித உடலின் ஜீரணமண்டலத்துக்கு அவசியமான நார்ச்சத்து இல்லாததால் இத்தகைய சத்துக்கள் இருந்தும் பயனில்லை. அதனோடு பாக்டீரியா போன்ற நுண்ணீயிர்கள் அதிகம் இருப்பதால் இது முற்றிலும் உடலுக்கு நோயை மட்டுமே தருகிறது. அதில் இருக்கும் சத்துகளும் பயனற்று விடுகிறது. இந்த பாக்டீரியாக்கள் வயிற்றிலுள்ள E.Col. பாக்டீரியாக்களுடன் சேர்ந்து அதனை கெடுத்து விடுகின்றது.

அதனால் குடல் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த பாக்டீரியாக்கள் மூளை செல்களை அழிக்கக் கூடிய அளவுக்கு நச்சுத் தன்மை வாய்ந்தது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அசைவ உணவுகளை உண்ணும்போது உள்உறுப்புகள் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் அனைத்து உறுப்புகளும் சோர்வடைகின்றன. இதனால் குறுகிய காலத்திலேயே உள்உறுப்புகள் அனைத்தும் பழுதடைந்து விடுகின்றன. மாமிச உணவுகளை உண்ணும் நாட்களில் கழிவு வெளியேற்றம் குறைவாகவே இருக்கும். அதிக தாகம் ஏற்படும். ஆனால் வியர்வை சிறுநீர் வெளியேற்றம் குறைவாகவே இருக்கும். இதனால் (TOXIC MATTER) என்று சொல்லக் கூடிய நச்சுத் தன்மை இரத்தத்தை அசுத்தபடுத்தி தோல் வியாதிகள், சர்க்கரை, உப்புநீர் (சிறுநீர் செயலிழப்பு ) போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் (LDL, VLDL) அதிகரித்து கொழுப்புச் சத்து (Hyphercholestrolemia), இதய நோய் போன்றவற்றை உண்டாக்குகிறது. இதிலுள்ள புரதச் சத்து, உடல் பருமன், சர்க்கரை போன்ற நோய்களை விளைவிக்கக்கூடியவை. இத்தகைய அதிக அளவில் எதிர்மறையான விளைவுகள் மட்டுமே உள்ள மாமிச உணவுகளைத் தவிர்த்தாலே 50 சதவீதம் இயற்கை முறைக்கு மாறி ஆரோக்கிய வாழ்வை அடைவதற்கு வழியாகும்.

தாமசீக உணவு :

தாமசீக உணவு என்பது சமைத்த, நாள்பட்ட, பதபடுத்தப்பட்ட, சத்துகளைப் பிரித்து எடுக்கப்பட்ட, எண்ணெய்யில் வறுத்து எடுக்கப்பட்ட உணவுகளாகும். சமைத்து மூன்று மணிநேரம் கழிந்த அனைத்து உணவுகளும் தாமசீக உணவுகள் என்றே சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஊறுகாய், பேக்கரி பொருள்கள் Tinned, Canned foods, drinks, Pizza, Chips,   பரோட்டா, etc., மைதாவில் செய்யக் கூடிய அனைத்து பொருள்களுமே உடலுக்கு கேடு விளைவிக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. கோதுமை மாவை பென்சாயில் பெராக்சைடு எனும் ரசாயணத்தால் வெண்மையாக்குகின்றார்கள். அது தலையில் ‘டை’ யில் உள்ள ஒரு ரசாயணம். இதுவே மாவில் உள்ள புரோட்டினுடன் சேரும் போது அது சர்க்கரை நோய் உருவாக காரணமாகிறது. ‘அலேக்சன்’ என்னும் ரசாயணம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. இதுபோக செயற்கை வண்ணம், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர்ஸ், பிரிசர்வேட்டிவ்ஸ், இனிப்பு சாக்ரீன், அஜினமோட்டோ போன்ற பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. ‘அலோக்சன்’ சோதனை கூடத்தில் எலிக்கு நீரிழிவு நோய்கள் வர பயன்படுத்தப்படுகிறது. இந்த மைதா பொருள்களை சாப்பிடும்போது மனிதனுக்கு சர்க்கரை நோய் வருகிறது. மேலைநாடுகளில் மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் சிறுநீரகக் கற்கள், இதய கோளாறு, நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

சமைத்த நாள்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரித்து, கெட்டக் கொழுப்புகளும் அதிகரிக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதயநோய், உடல் பருமன், ஜீரண கோளாறுகள், வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல், போன்ற ஆரம்ப நோய்களில் ஆரம்பித்து கொடிய நோய்களான கேன்ஸர் வரை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த உணவால் உடலில் கழிவுகள் சேமிக்கப்பட்டு, நாள்பட்ட வியாதியாக மாறுகின்றன. உடல் தட்பவெட்ப நிலை மாற்றத்தையும் உடல் வளர்சிதை மாற்றம் (metabolism) போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படுத்தி நோய்களை வரவழைக்கின்றன.

முக்கியமாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் பருமன், குழந்தையின்மை, அதற்கு காரணமான தைராய்டு பிரச்சனைகள் (Hypothyroidism ), (COD) கருப்பை நீர்க்கட்டிகள் அதனால் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்திற்கும் முக்கிய காரணமாக விளங்குவது இத்தகைய தாமசீக மற்றும் ராஜசீக உணவு வகைகளை உண்பதால் மட்டுமே என்று பல வருடங்களுக்கு முன்பே ஆய்வு மேற்கொண்டு தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கான முழு தீர்வும் மருந்து மாத்திரைகள் இன்றி உணவு மாற்றத்தால் மட்டுமே இயலும் என்பதையும் நீரூபித்துள்ளனர்.

இத்தகைய சமைத்த உணவுகளை சாப்பிடுவதால் அதன் சுவைக்கு அடிமையாகி அதன் குறைகளை அறிய மறுக்கிறோம். சமைக்கும்போது சில ஊட்டச் சத்துக்கள் குறைந்து விடுகின்றன. சுவைக்காகவும், பார்வைக்கு அழகாக இருக்கவும் சேர்க்கும் ரசாயணப் பொருள்கள் நம் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. உடலை வருத்தி, பொருள்களையும் செலவழித்து, இதுபோன்ற உணவுகளை உண்டு நோய்களை உண்டாக்கி கொள்கிறோம். எனவே, முடிந்த அளவு கடைகளில் வாங்கும், நாள்பட்ட, தயாரித்து அடைத்து வைக்கும் பொருள்கள், போன்றவைகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

சாத்வீக உணவு :

முதலாவது விரிவாக உள்ள சாத்வீக உணவு என்பது ஆரோக்கியத்திற்கும் முதன்மையானதே ஆகும். சாத்வீக உணவு என்பது சமைக்க அவசியமில்லாத, சத்துக்கள் நிறைந்த காய்கள், கனிகள், கீரைகள், பருப்புகள், பயறுகள் போன்றவையாகும். இந்த சாத்வீக உணவில் அனைத்து சரிவிகிதச் சத்துகளாகிய மாவுச் சத்து, புரதச் சத்து, விட்டமின், மினரல்கள், நீர்ச்சத்து, நார்ச் சத்து நிறைந்திருக்கின்றன. இவ்வகை உணவுகளை உண்பதால் சத்து பற்றாக்குறையால் வரும் நோய்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. கெட்ட உணவுகளால் வரக்கூடிய சர்க்கரை, கொழுப்பு, இதயநோய், உயர் இரத்தழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு, உடல் பருமன் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்பில்லை. வந்த நோய்கள் முற்றிலும் குணமடையவும் உதவுகிறது. இவை எளிதில், விரைவில் ஜீரணமா வதால் உடல் உறுப்புகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்பதுடன் ஆரோக்கியமாக இருப்பதற்கு முற்றிலும் உதவுகிறது. இரத்தத்தில் அமிலத்தன்மை குறைந்து கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகிறது. கனியுணவில் உள்ள நார்ச் சத்துகள் உடம்பில் கெட்ட கொழுப்புகளை தேங்கவிடுவதில்லை. அதனோடு அனைத்து நோய்களுக்கும் முக்கிய மூல காரணமான மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. நோய்கள் வராமல் காப்பது மட்டுமின்றி வந்த நோய்கள், எத்தகைய கொடிய நோய்களாயினும் சரி ( கேன்ஸர்) அதனை முற்றிலும் குணமடையச் செய்யும் அற்புத ஆற்றல் இத்தகைய சாத்வீக உணவுமுறைக்கு உள்ளது என்பது அனுபவத்திலும் ஆராய்ச்சிபூர்வமாகவும் இயற்கை மருத்துவர்கள் கண்டறிந்த உண்மையாகும்.


Spread the love