இயற்கை தரும் இனிய வாழ்வு

Spread the love

இயற்கையோடு இணைந்த வாழ்வு

இயற்கையான செயல்பாடுகளை, நியதிகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளவே அறிவியல் தொன்று தொட்டு முயற்சி செய்து வந்துள்ளது.

கதிரவன் ஏன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான்?

ஆப்பிள் பழுத்ததும் ஏன் கீழே விழுகிறது?

நமக்கு ஏன் நோய்கள் வருகின்றன?

இப்படிப்பட்ட பலப்பல ஆய்வுகள், தேடல்கள், முயற்சிகள்.

இந்த முயற்சிகள் முழுமை அடைவதற்கு முன்பாகவே இயற்கையை முற்றிலும் ஆராய்ந்து அறிந்து கொண்டு விட்டதாக சில அறிவியல் விஞ்ஞானிகள் கருதி விட்டனர். அதனால் இயற்கை விதிகளைக் கட்டுப்படுத்தவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முயன்றனர். தொல்லையும் அங்கிருந்துதான் தொடங்கியது.

காரணம், இயற்கை பற்றிய எல்லாவற்றையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அறிந்து கொள்ள வேண்டிய சிறிய அளவு கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. இதனால் இயற்கையைக் கட்டுப்படுத்த முயன்றபோது எதிர்பாராத பல விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

“ஆய்வின்போது கற்பனையில் கூட எண்ணிப்பார்க்காத பல அற்புதங்களை இயற்கை நிகழ்த்தியதை, நாங்கள் சிறு குழந்தைகள்போல் கண்டு வியந்து நின்றோம் என்பதுதான் உண்மை” என்று புகழ்மிக்க அறிவியல் விஞ்ஞானியான டாக்டர். டீன் ப்ளாக் தன்னுடைய  நூலில் குறிப்பிடுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லூயி பாஸ்டர் நுண்ணுயிர்க் கிருமிகளால் நோய்கள் உண்டாகின்றன என்ற கோட்பாட்டை உருவாக்கிய பிறகு, ராபர்ட் கோச் பாக்டீரியாக்களைப் பிரித்தறிகின்ற வழியை கண்டறிந்த பிறகு, பல விஞ்ஞானிகள் ஆன்ட்டி பயாடிக் எனப்படும் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் மருந்தை கண்டுபிடிக்கும் பணியைத் தொடங்கினர்.

இன்றைய நிலையில் பல வகையான பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய 60க்கும் மேற்பட்ட ஆன்ட்டிபயாடிக்குகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதேசமயம் பாக்டீரியாக்களில் பெரும்பாலானவை, இவ்வகை மருந்துகளை எதிர்த்து தாக்குப்பிடிக்கும் வகையில் தங்களது தடுப்பாற்றலை வளர்த்துக் கொண்டுள்ளன. லூயி பாஸ்டர் காலத்திலும் கோச் காலத்திலும் இல்லாதிருந்த பல பாக்டீரியாக்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல திறன் மிக்க பல ஆன்ட்டி பயாடிக்குகளைக் கூட போக்கு காட்டி ஏமாற்றுகின்ற திறமையை இந்த பாக்டீரியாக்கள் பெற்றுள்ளன.

புற்றுநோய் மருத்துவத்தில் நிபுணரான டாக்டர். ராபர்ட்.டி.ஷிம்பே புற்றுநோய்க்கு எதிரான மருத்துவப்போர் பற்றி ஒரு திடுக்கிடும் கருத்தைத் தெரிவித்துள்ளார். “வேதி மருத்துவம் (Chemotherapy) புற்றுநோயை மேலும் மோசமாக்குகிறது. புற்றுநோய் செல்கள் வேதி மருத்துவத்தையே எதிர்த்துத் தாங்கிக் கொள்கின்ற திறம் பெறுவதுடன் அவற்றின் எதிர்ப்பு முறை புற்றுநோய் மருத்துவத்தையே ஏமாற்றுவதுபோல் அமைகிறது” என்று கூறுகிறார். அறிவியல் பல நேரங்களில் தகுதிக்கு மேற்பட்ட தன் மதிப்பைப் பெற முயல்கிறது என்பது தான் இன்று பலருடைய கருத்தாகிறது.

தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தியதன் மூலம் மனித வாழ்நாளை நீட்டித்திருப்பதாக மருத்துவ அறிவியல் பெருமைப்படுகிறது. உயரிய பெருமைதான். தவறில்லை. இந்த முன்னேற்றத்தில் ஆங்கில மருத்துவம் கணிசமான பங்கு பெறுகிறது. அதே சமையம் அதனால் பல பக்கவிளைவுகளையும் தரத்தானே செயகிறது. 

இந்த தேவையை செய்யக்கூடிய  இயற்கையான பொருள் மஞ்சள். ஆனால் இதனை நாம் நிகழ் கால வாழ்கையில் மறந்தே போய்விட்டோம். மஞ்சள் என்பது அத்தனை மேற்படி தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்று. இதனை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்த ஒப்பற்ற கிருமிநாசினியை, புற்றுநோய் எதிர்பியை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெற வேண்டும் என்ற சிந்தனையில் எடுத்துரைத்துள்ளோம்.


Spread the love