கணவரை இழந்து 1௦ வயது மகளோடு வாழ்ந்து வரும் 32 வயதான தாய் நவோமி ஜேக்கப்ஸ். ஒரு நாள்தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் போது தான் அந்த அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.தூங்குவதற்கு முன்னால் 32 வயதான இவருக்கு எழும்போது 15 வயது மனநிலை கொண்ட பெண்ணாகஎழுந்திருந்தார். எழுந்து பார்க்கும் போது இவருடைய வீடு, போட்டிருந்த துணி, படுத்திருந்த கட்டில்,இவையெல்லாம் எங்கிருந்து வந்தது என தெரியாமல் குழம்பியிருக்கின்றார். தன்னை கண்ணாடியில்பார்க்கும் போது, எதிர்காலத்தில் நான் இப்படி தான் இருப்பேன் என வெறுப்பு அடைந்திருக்கின்றார்.
மனநிலை முற்றிலுமாக மாறிய இவருக்கு இறந்த காலத்தில் நடந்த எதுவும் நினைவில் வரவில்லை.பள்ளி முடிந்ததும் அம்மாவை பார்க்க ஆசையாக ஓடி வந்த மகளை கூட நவோமிக்கு மறந்துபோயிற்று. இளம் வயதில் தனக்கென்று ஒரு தொழிலும், பெரிய வீடும் இருந்தது அந்த பத்திரிக்கைமூலமாக உணர்ந்திருக்கிறார். தவறான வயதில் போனதல் ஏமாற்றத்தின் உற்றத்திற்கே சென்றநவோமிக்கு மிஞ்சியது ஒரு பெண் குழந்தை மட்டும் தான்.
தான் 6 வயதாக இருக்கும்போது பாலியல் கொடுமைக்கு ஆளான நவோமி 25 வயது வரைக்கும் அதைமனதிற்குள்ளேயே புதைத்து சமூகத்தின் நாட்டமே இல்லாமல் இருந்திருக்கிறார். கடந்த காலநிகழ்வுகளை படிக்க படிக்க தன்னையே வெறுத்த நவோமி, 15 வயது மனநிலை எப்படி வந்தது எனதெரியாமல் தலையை பிச்சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
25 வயதில் தன் கையால் எழுதியதன்னுடைய வாழக்கை நிகழ்வுகளை கூட, யார் இதை எழுதியிருப்பார் என குழம்பியிருக்கிறார்.
பிரட்சனைக்கு முடிவை தெரிந்துகொள்வதற்காக மருத்துவரை அணுகிய நவோமி, தனக்கு நடந்தஎல்லாவற்றையும் சொல்லி அழுதுள்ளார். சில ஆராய்ச்சிக்குப்பின் , நவோமிக்கு மறதி நோயில் ஒருவகையான டிஸ்-
அஸ்சோசியேடிவ் அம்னீசியா ஏற்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது. அதுவும் 3வருடம் கழித்து தான் இது தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவர் கூறுவது என்னவென்றால்?
நவோமி எதையும் மறக்கவில்லை, வாழ்க்கையில் அவர் சந்தித்த கடுமையான பிரட்சனை நவோமியின் மூளையை பாதித்து, மன அழுத்தத்தால் சில நினைவுகளை மூளை மறந்து போகசெய்கிறது என தெரியவந்துள்ளது. தனக்கு இப்படி ஒரு நோய் இருக்கின்றது என தெரிந்து நவோமிநிம்மதி அடைந்துள்ளார். மனஅழுத்தம் உண்மையிலேயே ஒரு கொடிய நோய் தான்.