சிறுநீரகத்தை காக்கும் நன்னாரி வேர்..!

Spread the love

ஆயுர்வேதத்தில் மிகவும் அறிய மருந்தாக இருக்க கூடியது தான் நன்னாரி வேர். இந்த வேர் பதப்படுத்தப்பட்டு அதிகமான நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த வேரை சுத்தம் செய்து தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து குடித்து வர சிறுநீர் பெருகுவதோடு, சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

நன்னாரி வேரை இடித்து துளாக்கி, பசும்பாலோடு கலந்து குடித்து வர நீர் கட்டு குணமாகும். பச்சையான நன்னாரி வேரை இடித்து அரைத்து காய்த்த பசும்பாலில் குடித்தால் வறட்டு இருமல் குணமாகும். நன்னாரிவேர் சர்பத் வெயில் காலத்தில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றது. இதை தவறாமல் வாங்கி குடித்து வர உடலிற்கு ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும். அதிகபடியான உடல் சூடும் தண்ணீரும் இரத்தத்தையும் சுத்தமாக்கும். வியர்வையால் உண்டாகின்ற தோல் பிரட்சனைகளும் சரியாகும்.

மேலும் பச்சை நன்னாரி வேரை அரைத்து, பாலில் கலந்து குடித்து வர மேகவெட்டை, நீர் சுருக்கு, நீர் கடுப்பு, குணமாகும். தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் நரைத்த முடியும் கருமையாகும். ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா சூரணம், அஸ்வகந்தாதி லேஹம் போன்ற மருந்துகளையும் நன்னாரி வேரின் பயன் தேவையாக இருக்கின்றது.  நன்னாரி வேரை ஊற வைத்து ஒரு நாள் கழித்து அந்த தண்ணீரை வடிகட்டி, காலை மற்றும் மாலை அரை தம்ளர் குடித்து வந்தால் அதுவே, பித்தம், நீரழிவு போன்ற நோய்களுக்கு நல்ல மருந்து.

இதன் பயன்பாடு சித்தர்கள் காலத்தில் மிகவும் வரவேற்பு பெற்றதாக இருந்தது. ஆனால் தற்போது மக்களின் பயன்பாடு இல்லாமல், சில கிராமங்களில் கூட நன்னாரியின் பயன்பாடு அறியபடாமலேயே உள்ளது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக நாட்டு மருந்து கடைகளில் இப்பொழுதும் கிடைத்து வருகின்றது. நன்னாரி டீயோடு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் பலம் இழந்த உடல் வலுபெறும்.    


Spread the love