நகங்களை அழகாக வைப்பதற்கு முன்னால் அதை ஆரோக்கியமாக வைப்பது அவசியம்… அதனால் அதற்கு டயட் மிகவும் முக்கியம்… அதற்கு ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு, ஒமேகா 3 fatty ஆசிட் நகங்கள் ஆரோக்கியமாக வளர உதவுகின்றது... வைட்டமின் பி நகங்களின் பொலிவிற்கும், சிங் நகத்திற்குள் இருக்கும் white spots மறையவும் உதவுகின்றது…
நகங்களுக்காக நேரத்தை ஒதுக்க நினைப்பவர்கள், ஒவ்வொரு நேரமும் கை கழுவிய பின், moisturizer பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது… இது எதற்காகவென்றால், கை கழுவிய பின் நமது விரல்கள், குறிப்பாக நகத்தை சுற்றி மிகவும் உலர்ந்துவிடுகிறது…. இது நகத்தை வலுவிழக்க செய்வதோடு, நகம் வெளுத்து விடும்.. அதனால் தான் moisturize பயன்படுத்த வேண்டும்… மற்றொரு விஷயம் என்னவென்றால்? நக பராமரிப்பிற்கு தேங்காய் எண்ணெய் அவசியமாக இருக்கின்றது….
நகத்திற்கும் தோலிற்கும் நடுவில் இருக்கும் ஊடுருவல் மூலமாக பாக்டீரியாக்களால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது… அதனால் அடிக்கடி, தேங்காய் எண்ணெயால் நகத்தை சுற்றி மசாஜ் செய்வது மூலம் அழுக்குகள் சேராமல் பார்க்கலாம்… அதோடு நகமும் பளபளப்பாகும்…நாம் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், நமது உடலில் இருக்கும் சிறிய குறை கூட சில நேரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்… நகம் வளர்க்க வேண்டும் என விரும்புபவர்கள் அதை சுத்தமாக பராமரிப்பதுமிகவும் அவசியம்….
காலை அல்லது மாலை வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் உப்பை கலந்து அதில் ஒரு பத்து நிமிடம் விரல்களை நனைத்து எடுத்தால் நகதொற்றுகள் அழிவதோடு, விரல்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்…நகத்தை பாலிஷ் போடுவதற்கு முன்னால், நேரடியாக அப்ளை பண்ணாமல், பேஸ் கோட் பயன்படுத்துவது மிகவும் நல்லது… இது நகம் கரைபடியாமல் தடுக்கின்ற அடுக்காகவும், நகத்தை ப்ளீச் என காட்டவும் பயன்படுகிறது… பழுப்பு நிறத்தில் இருக்கும் நகம் அழகாக தெரியாது… பழுப்பு நிறத்தில் இருக்கும் நகத்தை வெண்மையாக்குவதற்கு, எலுமிச்சை நல்ல பொருளாக இருக்கின்றது…
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், இரண்டு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து…. இந்த கலவைக்குள் நகங்களை ஊற வைத்து எடுக்கவும்… வெறும் எலுமிச்சம் பழத்தை, நறுக்கி நகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வாருங்கள்… இது நகம் நிறம் மாறவும், நுண்கிருமிகளால் உண்டாகும் பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது..எப்போதெல்லாம் நகங்கள் நிறமற்று இருக்கின்றதோ, அந்த நேரங்களில் நகத்தை, பாலிஷ் செய்வதை தடுப்பது நல்லது.. தேங்காய் எண்ணெய் போன்று நகத்தை மசாஜ் செய்ய ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்….