ரோஹன் ஜோஷ்
தேவையானவை
ஆட்டுக்கறி – 500 கிராம்
பெரிய வெங்காயம் – 4
பூண்டு – 10 பல்
இஞ்சி – 2 இன்ச்
மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன்
மல்லிப் பொடி – 11/2 டீஸ்பூன்
சீரகப்பொடி – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையானஅளவு
தக்காளி – 2
செய்முறை
தக்காளியை வேக வைத்து தோலுரித்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தில் பாதி அளவு (2) வெங்காயத்தையும், இஞ்சி பூண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் ஒரு குக்கரில் நெய், எண்ணெய் இரண்டும் கலந்து ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும். மீதியுள்ள 2 வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். அதனையும் போட்டு வதக்கி, வதங்கியதும் கறித் துண்டுகளை சேர்த்து வதக்கவும். கறி வதங்கியதும் வெங்காயம் அரைத்ததைப் போட்டு வதக்கி பின் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீரகப் பொடி, போட்டு வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 2 விசில் வரை வேக விடவும். கறி நன்கு வெந்ததும் குக்கரைத் திறந்து அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் நன்கு கொதித்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சைனீஸ் மட்டன் சாப்ஸ்
தேவையானவை
பொரிக்க
ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள் – 6
வெங்காயம் அரைத்தது – 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க.
கிரேவி செய்ய
வெங்காயம் நறுக்கியது – 1
குடமிளகாய் நறுக்கியது – 1
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
சோயா சாஸ் – 2 டே ஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு – தேவையானது
சீனி – 1 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயம் அரைத்தது, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து சாப்ஸ் கறியில் பிசறி அரைமணி நேரம் ஊறவிடவும். பின்னர் அக்கறியை அந்த மசாலாவுடன் குக்கரில் போட்டு வேக வைக்கவும். பின்னர் அந்த கறியை எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் குடமிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் கிரேவிக்கு கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்க்கவும். பின்னர் பொரித்து வைத்துள்ள சாப்ஸையும் சேர்த்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.
மட்டன் மன்சூரியன்
தேவையானவை
இளசான ஆட்டுக்கறி – 250 கிராம்
எண்ணெய் – பொரிக்க
முட்டை – 1
கார்ன்ப்ளார் – 1 டே.ஸ்பூன்
மைதா மாவு – 2 டே. ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டே. ஸ்பூன்
மிளகுபொடி, உப்பு -தேவையான அளவு
கிரேவி செய்ய
இஞ்சி நறுக்கியது – 1 டீஸ்பூன்
பூண்டு நறுக்கியது – 1 டே. ஸ்பூன்
நறுக்கியபச்சை மிளகாய் -1 டே. ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 டீ ஸ்பூன்
சோயா சாஸ் -1டே.ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள், எண்ணெய் – தேவையான அளவு
கார்ன்ப்ளார் – 1 டே. ஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
சீனி – 1 டீஸ்பூன்
செய்முறை
கறியை நன்கு கழுவி, நம்பர் 1 – ல் கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் கலந்து கறியில் பூசி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அந்த கறியை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி நம்பர் 2 – ல் கொடுத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு மிதமான தீயில் வதக்கவும். பின் மற்ற எல்லாப் பொருள்களையும் போட்டு கொதிக்க விடவும். பின்னர் பொரித்து வைத்துள்ள மட்டன் துண்டங்களைப் போட்டு மிதமான தீயில் வேக விடவும். கடைசியாக கார்ன்ப்ளார் கரைத்ததை ஊற்றி கிரேவி திக்காகும் வரை விடாமல் கிளறவும். பின் ஸ்பிரிங் ஆனியன் தூவி ப்ரைட்ரைஸீடனோ அல்லது நூடுல்ஸ் உடனோ பரிமாறவும்.
செட்டிநாடு கோப்தா
தேவையானவை
கொத்திய ஆட்டுக்கறி – 250 கிராம்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, புதினாநறுக்கியது – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
அரைக்க
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பட்டை – 1 இன்ச்
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 1/2 கப்
கசகசா – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
தேங்காய் துருவல் – 1/2 கப்
செய்முறை
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை யெல்லாம், வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி வறுத்து, மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் கொத்திய ஆட்டுக்கறி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வேக வைத்ததை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின் முதலில் அரைத்த கலவை, அரைத்த மட்டன், கொத்தமல்லி, புதினா, தேவையான உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக பூரி மாவு போல பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சிறு சிறு கோப்தாக்களாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தக்காளி கெட்சப்புடன் பரிமாறவும்.