திருக்குறளும் வேதாந்தமும்

Spread the love

உயிருக்கும், உயிர் தங்கி நின்ற உடம்புக்கும் உள்ள உறவு, முன்பு தான் தங்கியிருந்து கூடு தனித்துக்கிடப்ப அதில் தங்கியிருந்த பறவை பறந்து சென்றதைப் போன்றது.

இறப்பது என்பது உறங்குவது போன்றதாகும். பிறத்தல் என்பது உறக்கத்திலிருந்து கண்விழிப்பது போன்றதாகும்.

இவ்வுலகில் கல்விகேள்விகளால் மெய்ப்பொருள் உணர்ந்தவர்கள், மீண்டும் இவ்வுலகத்தில் பிறந்து துன்பம் அடையாத நெறியை அடைவார்கள்.

நன்றாக ஆராய்ந்து உள்ளத்தால் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்து கொண்டால் மீண்டும் பிறப்பு உள்ளதாக நினைக்க வேண்டாம்.

பிறவிக்குக் காரணமாகிய அறியாமை நீங்கப்பெற்றுச் சிறப்பு எனும் வீடு பேற்றை அளிக்கும் பரம் பொருளைக் காண்பதே அறிவாம்.

எல்லாப் பொருளுக்கும் சார்பாக நிற்கும் பரம் பொருளை உணர்ந்து பின்னர் இருவகைப் பற்றும் கெட ஒழுகினால் ஒருவனை வந்து பற்றித் துன்பம் தரவல்ல நோய்கள் பற்றிக் கொள்ளா.

விரல் நுனிகளில் யோகா முத்திரை யோகம்

முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த

“பஞ்ச மஹாபூதங்கள்” ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன.

1.         கட்டைவிரல் – அக்னி

2.         ஆள்காட்டி விரல் – வாயு

3.         நடுவிரல் – ஆகாயம்

4.         மோதிரவிரல் – பூமி

5.         சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை

  1. ” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
  • ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
  • எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
  • எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
  • இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
  • முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
  • வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

Spread the love