கடுகு எண்ணெய்க்கு, பலவித பிரட்சனைக்கு பல்வேறு தீர்வுகள் தரகூடிய குணம் இருக்கின்றது. அதுமட்டுமின்றி பிரட்சனைகள் வரும்முன் காக்ககூடிய ஆற்றலும் இருக்கின்றது. பல ஆய்வுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்னவென்றால்? கேன்சர் செல்களை அழிக்க கூடிய பண்புகள் கடுகு எண்ணெய்க்கு உள்ளது. அதனால் இதில் இருக்கும் லினோலெனிக் ஆசிட்டை நமது உடல் ஒமேகா-3 கொழுப்பு அமிலமாக எடுக்கின்றது.
இந்த ஆசிட் வயிறு மற்றும் பெருங்குடலில் ஏற்படும் கேன்சர் செல்களை வளர விடாமல் தடுக்கும். பொதுவாக எண்ணெய் பொருளும், கொழுப்பும் இதயத்திற்கு தீங்கானது என்று கூறுகின்றோம். ஆனால் இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலம் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6, இதயத்திற்கு பிரட்சனை ஏற்படாமல் ஆபத்தில் இருந்து 5௦% காப்பதாக சொல்லப்படுகிறது. கடுகு எண்ணெயில் கிடைக்க கூடிய ஹைப்போகொலஸ்ட்ரோலெமிக் மற்றும் Hypolipidemic இந்த இரண்டு பொருட்களும், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும்.
அதனால் இதயத்திற்கு வர கூடிய Cardiovascular நோய் வராமலும் காக்கும் என சொல்கிறார்கள். மேலும் கடுகு எண்ணெய் செரிமான மண்டலத்தில் சிக்கல் வராமல் சீராக இயங்க உதவுகிறது. இது கொழுப்பை கட்டுபடுத்துவதனால், இரத்த அழுத்த அபாயம் வராது. மூட்டுவலி இருப்பவர்கள் கடுகு எண்ணெய் உடலில் தடவி வெது வெதுப்பான சுடு தண்ணீரில் குளித்து வர மூட்டுவலி நீங்கும். அதோடு குளிர்காலத்தில் நமது உடலையும் வெது வெதுப்பாக வைக்க முடியும். இந்த குளியல் சருமத்தின் வறட்சி மற்றும் கூந்தல் வளர்ச்சியையும் போக்கி, ஈரப்பதத்தை வழங்கும். தலையில் பொடுகு உள்ளவர்கள் கடுகு எண்ணெயோடு, எலுமிச்சை சாற்றை சேர்த்து உச்சந்தலையில் தேய்த்து, 2௦ நிமிடம் கழித்து குளித்து வர பொடுகு நீங்கும்.
கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வந்தால் அது நமது இரத்த ஒட்ட செயலை தூண்ட செய்யும். இதனால் இரத்த ஒட்டம் சீராக இயங்கும் என சொல்லப்படுகிறது. இதனால் உடல் சூடு உடனே குறைந்து, சருமத்தில் இருக்கும் நச்சுகளும் வெளியேறும். குறிப்பாக தசைபகுதியில் ஏதோ ஒரு உணர்வின்மையாக உணர்கிறீர்கள் என்றால் அந்த பகுதியில் கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வந்தால் அந்த இடத்தில் உணர்வு கிடைக்கும். காய்ச்சல் மற்றும் சளி பிரட்சனை வந்தால், சீரகம் மற்றும் இரண்டு டீஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல் மற்றும் சளி தீரும். வறண்ட உதட்டில் உருவாகும் வெடிப்பை தடுத்து வசீகர உதட்டை பெற தினமும் தூங்க போகும் முன்னால் தொப்புளில் கடுகு எண்ணெய் சில சொட்டு விட்டு மசாஜ் செய்து படுத்தால் உதடு வெடிப்பு நீங்கும்.